Home /News /international /

வானிலிருந்து கொட்டிய அதிசய ‘மீன் மழை’.. வியந்துபோன மக்கள் - படங்கள்

வானிலிருந்து கொட்டிய அதிசய ‘மீன் மழை’.. வியந்துபோன மக்கள் - படங்கள்

Representational Image (  மாதிரி படம் )

Representational Image ( மாதிரி படம் )

வானில் இருந்து மழைத் துளிகளுக்கு மாறாக இப்படி ஜீவராசிகள் வானத்தில் இருந்து விழுந்தால் மக்கள் ஆச்சரியப்படாமல் என்ன செய்வார்கள்

  • Last Updated :
    வானத்திலிருந்து மீன்கள் மழை போல பொழிந்ததை பார்த்து மக்கள் வியப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர்.

    உலகின் பல மூலை முடுக்குகளில் பல விநோதமான சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வானிலிருந்து அதிசயமாக ‘மீன் மழை’ பொழிந்திருக்கிறது. நம்புவதற்கு சற்று கடினமாக இருந்தாலும்.. ஆம், இது உண்மைதான், நிஜத்திலேயே மீன்கள் மழைபோல பொழிந்திருக்கின்றன.

    இப்படி ஒரு சம்பவத்தை இதற்கு முன் கேள்விப்பட்டிருந்தாலும் கூட மிக மிக அரிதிலும் அதிதான நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டெக்ஸார்கானா எனும் பகுதியில் கடந்த டிசம்பர் 30ம் தேதி தான் இந்த அதிசயம் நடந்திருக்கிறது. வானில் இருந்து மீன்கள் மழையுடன் சேர்ந்து விழுந்திருக்கின்றன. இதை பார்த்த மக்கள் வியந்து போயிருக்கின்றனர்.



    வானில் இருந்து மழைத் துளிகளுக்கு மாறாக இப்படி ஜீவராசிகள் வானத்தில் இருந்து விழுந்தால் மக்கள் ஆச்சரியப்படாமல் என்ன செய்வார்கள். விலங்குகள் மழை போல வருவது அறிவியல்பூர்வமாக நடக்கக் கூடிய ஒன்று தான். சிறிய தண்ணீர் ஜீவராசிகளான தவளைகள், நண்டுகள், சிறிய மீன்கள் போன்றவை காற்றழுத்தத்தால் நீர்நிலைகளில் இருந்து இழுக்கப்பட்டு அவை அதே பகுதிகளில் மழைத்துளிகளுடன் சேர்ந்து மழை போல நிலப்பரப்பில் பொழியும். ஆனால் இது மிகவும் அரிதாக நடக்கக் கூடிய ஒன்றாகும். இதற்கு முன்னர் கலிபோர்னியா , வடக்கு செர்பியா போன்ற பகுதிகளில் மீன் மழை பொழிந்திருக்கிறது.



    மீன் மழை குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அந்நகர வாசிகளால் பகிரப்பட்டு வருகின்றன. ஒரு பயனர் ஒருவர் இனி நகரின் பூனைகளுக்கு கொண்டாட்டம் தான் என்று கூறியிருக்கிறார்.
    மற்றொருவர் மீனின் அளவை காட்டும் வகையில் அதன் அருகே நின்று கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார். இன்னும் சிலரோ இறந்து போன மீன்களை அப்புறப்படுத்தாவிட்டால் சுகாதாரக்கேடு ஏற்படுமே என கவலை தெரிவித்துள்ளார்.

    மற்றொரு நபரோ, 20 ஆண்டுகளுக்கு முன்பாக மீன் மழை வந்தது என நான் கூறியபோதெல்லாம் என்னை பைத்தியம் போல பார்த்தனர். ஆனால் இன்று நான் அவர்களை ஏளனமாக பார்த்து சென்றேன் என தெரிவித்துள்ளார்.
    Published by:Arun
    First published:

    Tags: USA

    அடுத்த செய்தி