Home /News /international /

Texas School Shooting: 19 குழந்தைகளைக் கொன்ற கொடூரன்: தன் முகத்தையே பல முறை கத்தியால் குத்திக் கிழித்தவன், சிறுவயதில் கடும் கேலிக்கு ஆளானவன்

Texas School Shooting: 19 குழந்தைகளைக் கொன்ற கொடூரன்: தன் முகத்தையே பல முறை கத்தியால் குத்திக் கிழித்தவன், சிறுவயதில் கடும் கேலிக்கு ஆளானவன்

படுபாதகக் கொலைகள் நடந்த பள்ளி வளாகம்

படுபாதகக் கொலைகள் நடந்த பள்ளி வளாகம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், உவால்டேயில் பள்ளிக்குள் நுழைந்து 19 பச்சிளம் பாலகர்களை துப்பாக்கித் தோட்டாவுக்கு பலியாக்கிய 18 வயது கொலைகாரன் சால்வடார் ரொலாண்டோ ரேமோஸ் என்பவன் சிறு வயதில் திக்குவாய் என்பதால் பள்ளியிலும் சமூகத்திலும் கடும் கேலிக்கும் கிண்டல்களுக்கும் ஆளானவன் என்பதால் எப்போதும் கடும் கோபத்துடனும் மனநிலை பிறழ்ந்த செயல்களிலும் ஈடுபடுபவர் என்று அவருடன் ஆரம்பத்திலிருந்தே படித்த சக மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்

மேலும் படிக்கவும் ...
  அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், உவால்டேயில் பள்ளிக்குள் நுழைந்து 19 பச்சிளம் பாலகர்களை துப்பாக்கித் தோட்டாவுக்கு பலியாக்கிய 18 வயது கொலைகாரன் சால்வடார் ரொலாண்டோ ரேமோஸ் என்பவன் சிறு வயதில் திக்குவாய் என்பதால் பள்ளியிலும் சமூகத்திலும் கடும் கேலிக்கும் கிண்டல்களுக்கும் ஆளானவன் என்பதால் எப்போதும் கடும் கோபத்துடனும் மனநிலை பிறழ்ந்த செயல்களிலும் ஈடுபடுபவர் என்று அவருடன் ஆரம்பத்திலிருந்தே படித்த சக மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

  மெக்சிகோ எல்லையிலிருந்து சுமார் 1 மணி நேர தூரத்தில் உள்ள உவால்டே என்ற இடத்தில்தான் இந்த துப்பாக்கிக் கலாச்சாரம் தன் கொடூர முகத்தைக் காட்டியுள்ளது. 18 வயதே நிரம்பிய ஒருவனுக்குள் இத்தனை கொடூர எண்ணமா என்றால் நம்ப முடிகிறதா? முதலில் தன் பாட்டியை சுட்டுக் கொன்றான். பிறகு அப்பகுதியில் உள்ள ராப் ஆரம்பப் பள்ளிக்குச் சென்று தான் வந்த வண்டியை அப்படியே விட்டு விட்டு பள்ளிக்குள் நுழைந்தான். பச்சிளம் பாலகர்களை சுட்டுக்கொன்றான் 19 குழந்தைகள் 2 பெரியவர்கள் இதில் பலியாகினர், இவனும் போலீசாரால் கொல்லப்பட்டான். இந்த வெறித்தனம் சிறு வயது முதலே இருந்து வந்திருக்கிறது.

  கொலைகாரன் ரேமோஸை சிறு வயது முதலே அறிந்த சாண்டோஸ் வால்டேஸ் என்ற அவரது நண்பன், கொலைகாரனின் நடத்தை சிறிது காலமாகவே ரொம்ப மோசமாகிப் போனதாக அமெரிக்க ஊடகம் ஒன்றில் கூறியுள்ளார். இருவரும் ஃபோர்ட்நைட், கால் ஆஃப் டூட்டி போன்ற வீடியோகேம்களை சேர்ந்து ஆடியுள்ளனர்.  பிறகு ரேமோஸின் வன்முறை குணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட இவர் லேசாக ஒதுங்கியுள்ளார், ஆனால் ஒருமுறை அருகில் உள்ள கூடைப்பந்து மைதானத்திற்கு ரேமோஸும் வால்டேசும் வந்த போது ரேமோஸ் முகம் பூராவும் ஒரே கத்தி கீறல் காயமாக, வெட்டுக்காயமாக இருந்ததைக் கண்டு வால்டேஸ் என்ன அது என்று கேட்டிருக்கிறான். அதற்கு பூனை முகத்தைப் பிராண்டி விட்டது என்று சமாளித்துள்ளான் கொலைகாரன் ரேமோஸ்.

  ஆனால் நம்பாத வால்டேஸ் தூண்டித்துருவ, “என்னிடம் உண்மையை கூறினான். முகத்தில் கத்தியால் ஆங்காங்கே கீறிக்கொள்வான் என்று என்னிடம் கூறினான். நான் என்ன ப்ரொ ஏதாவது பைத்தியம் கிய்த்தியம் பிடித்து விட்டதா, எதற்கு இப்படி என்று அவனிடம் கேட்டேன், ரேமோஸ் அதற்கு சும்மா ஒரு வேடிக்கைதான்” என்று கூறியிருக்கிறான். எது? ஒருவன் தன் முகத்தையே கத்தியால் குத்தி குத்தி கீறுவது வேடிக்கையா என்று வால்டேஸ் மிரண்டு போய்விட்டான்.

  ரேமோஸ் மிடில் ஸ்கூல், மற்றும் ஜூனியர் ஹை ஸ்கூலில் படிக்கும் போது பேச்சுப்போட்டி, மற்றும் சில நிகழ்ச்சிகளில் திக்குவாயுடன் திக்கித் திணறியது கடும் கேலிக்குள்ளாகியுள்ளது.

  ரேமோஸின் நெருங்கிய நண்பர் ஸ்டீபன் கார்சியா கூறும்போது, “பள்ளி வாழ்க்கை அவனுக்கு மகிழ்ச்சியாக இல்லை, கடுமையான கேலிக்கு ஆளாகியிருக்கிறான். அது மட்டுமல்ல சோசியல் மீடியா, கேம் ஆடும்போது, ஏறக்குறைய அவன் எது செய்தாலும் சமூகத்தினால் நண்பர்களினால், குடும்பத்தினரால் கடுமையான கேலிக்கு ஆளானான், நல்ல பையன் தான், ரொம்பவும் கூச்ச சுபாவம் உள்ளவன். அவன் தன் இருண்ட குகையிலிருந்து வெளியே வந்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

  ஒரு முறை, அவர் கருப்பு ஐலைனர் அணிந்த புகைப்படத்தை வெளியிட்டான் ரேமோஸ், இது ஓரினச் சேர்க்கையாளரைக் குறிக்கும் என்று கூறி கடும் இழிசொற்களை எதிர்கொண்டான் ரேமோஸ் என்று கார்சியா கூறுகிறார்.

  பிறகு ஒரு கட்டத்தில் பள்ளிப்படிப்பை பாதியிலேயே உதறி விட்டு முழுதும் கருப்பு ஆடையையே அணிந்துள்ளான். ராணுவ நீள் பூட்கள், மற்றும் நீளமான முடி என்று ஆளே மாறிவிட்டான் என்கிறார் கார்சியா.

  நிறைய முறை திக்குவாயைக் கிண்டல் செய்த போது தன் பாட்டியிடம் வந்து வருந்தி இனி பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று கூறியிருக்கிறான் ரேமோஸ். மேலும் தன் அம்மாவுடன் சுமுகமான உறவில் ரேமோஸ் இல்லை, அடிக்கடி சண்டை, அம்மா பற்றி எதிர்மறையாக இன்ஸ்டாகிராமில் பதிவிடும் பழக்கமுடையவனாக இருந்துள்ளான் ரேமோஸ். குடும்பத்துடன் இணக்கமான உறவு நிலையில் ரேமோஸ் இருந்ததில்லை, என்று அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். அடிக்கடி துப்பாக்கிகளுடன் வீடியோ போடுவதை வழக்கமாகவும் கொண்டிருந்தான், இப்போது அது பெரிய வன்முறையில் முடிந்து அவனும் உயிரிழந்ததில் போய் முடிந்துள்ளது.

  அமெரிக்காவில் யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை நீடிக்கிறது. துப்பாக்கி உற்பத்தி தொழிற்சாலை வியாபார லாபிகளை அங்கு பகைத்துக் கொண்டு அரசியல் நடத்த வழியில்லை.  அதே போல்தான் போர் ஆயுதம் செய்யும் பெரிய பெரிய தொழிலதிபர்கள் லாபியையும் யாரும் பகைத்துக் கொள்ள மாட்டார்கள், இந்த நிலை நீடிக்கும் வரை அங்கு துப்பாக்கிக் கலாச்சரம் வன்முறை கலாச்சாரம் மேலும் பரவவே செய்யும்.  இந்த 2 ஆண்டுகளில் சுமார் பதினைந்தாயிரத்துக்கும் அதிகமான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
  Published by:Muthukumar
  First published:

  Tags: USA, Violence

  அடுத்த செய்தி