மலாலா மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதி சிறையிலிருந்து தப்பி ஓட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆடியோ பதிவை வெளியிட்ட இஷானுல்லா இஷான்.

மலாலா மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதி சிறையிலிருந்து தப்பி ஓட்டம்..!
இஷானுல்லா இஷான்
  • News18
  • Last Updated: February 8, 2020, 8:56 AM IST
  • Share this:
மலாலா மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தலிபான் தீவிரவாதி இஷானுல்லா இஷான் பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இஷானுல்லா இஷானே பேசி வெளியிட்டதாகக் கூறப்படும் குரல் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த ஆடியோவில், 2017 ஆம் ஆண்டில் தான் சரணடையும்போது பாதுகாப்புப் படையினர் தனக்களித்த வாக்குறுதிகளை மீறிவிட்டதாகவும், அதனால் தான் சிறையிலிருந்து தப்பித்து விட்டதாகவும் கூறியது போன்ற ஆடியோ பகிரப்பட்டுள்ளது.


2012-ஆம் ஆண்டு பெண்கல்விக்கு ஆதரவாகப் பேசி வந்த மலாலா மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்திலும், 2014-ஆம் ஆண்டு பெஷாவரில் ராணுவப் பள்ளி மீது நடந்த தாக்குதலில் 132 குழந்தைகள் பலியான சம்பவத்திலும் இஷானுல்லா இஷான் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: February 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading