• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ’தீவிரவாதத்தை விட்டு நீண்ட தொலைவுக்கு வந்துவிட்டோம்’ - இலங்கையிலிருந்து எழும் குரல்கள்

’தீவிரவாதத்தை விட்டு நீண்ட தொலைவுக்கு வந்துவிட்டோம்’ - இலங்கையிலிருந்து எழும் குரல்கள்

இலங்கை குண்டு வெடிப்பு

இலங்கை குண்டு வெடிப்பு

சாஷி தங்கியிருந்த வீட்டுக்கு சில கிலோ மீட்டர் தொலைவில் இந்தியாவைச் சேர்ந்த வெங்கடேஷ் ராவ் வெளியே செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்தார். மும்பையைச் சேர்ந்த அவர், கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் இலங்கைக்குச் சென்றார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இலங்கைத் தலைநகர் கொழும்புவை ஒட்டிய பகுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள், நாட்டை பெறும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இலங்கை விமானப் போக்குவரத்துதுறை ஆணையத்தின் துணைத் தலைவர் சாஷி தனதுங்கேவின் மனைவி திலீபாவுக்கு இன்று பிறந்தநாள். எனவே, அவர், அவரது மனைவியுடன் கொழும்புவிலுள்ள நட்சத்திர ஓட்டலுக்குச் சென்று பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டிருந்தார். போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்துதுறை அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கா, மற்றும் சாஷியின் குழந்தைப் பருவ நண்பர்கள், போன் மூலம், அவரது மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இலங்கை


சில நிமிடங்கள் கழித்து அவருக்கு ஒரு போன் வருகிறது. அதில், கொழும்புவிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. மேலும், வட புறநகர் பகுதிகளான நெகோம்போ, பாட்டிகாலோ பகுதிகளிலும் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அந்த தகவலைக் கேட்டு சாஷி அதிர்ச்சியடைகிறார்.

அமைதியான இலங்கையில் ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமையன்று, இத்தகைய தொடர் குண்டு வெடிப்பு நிகழும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் விடுதலைப் புலிகள் முழுவதும் அழிக்கப்பட்டப் பிறகு, அந்நாட்டில் அமைதி திரும்பியது.

இலங்கை குண்டு வெடிப்பு


இலங்கை மக்களுக்கு கடந்த பத்து ஆண்டுகள் அமைதியான ஒன்றாக இருந்துள்ளது. பாதுகாப்பு பணியில், அவர்களுடைய வழக்கமான இடங்களில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள், ராணுவத் தளத்துக்கு வரவைக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு பிரச்னையை கவனித்துவருகின்றனர். 180 பேர் வரை உயிரிழக்கக் கூடிய தீவிரவாதத் தாக்குதலை யாரும் எதிர்பார்க்கவில்லை.

இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் குறித்து தெரிவித்த சாஷி, ‘இந்த குண்டு வெடிப்பின் தாக்கத்தில் எனது உடல் அதிர்ந்தது. 2009-ல் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பிறகு, எங்களுடைய வாழ்க்கை ஆனந்தமாக இருந்தது. எங்களுடைய வரலாற்றில் இந்தக் காலம் மிகவும் அமைதியானது. ஒரு தீவிரவாத தாக்குதல் கூட நடைபெறவில்லை. நாங்கள் அமைதியின் பழத்தை ருசித்துக்கொண்டிருந்தோம்’ என்று தெரிவித்தார்.சாஷி தங்கியிருந்த வீட்டுக்கு சில கிலோ மீட்டர் தொலைவில் இந்தியாவைச் சேர்ந்த வெங்கடேஷ் ராவ் வெளியே செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்தார். மும்பையைச் சேர்ந்த அவர், கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் இலங்கைக்குச் சென்றார். அவருடைய வாழ்க்கை அமைதியாகச் சென்று கொண்டிருந்தது.

அமைதியான நாட்டில் வாழ்வதால் சந்தோஷமாக இருந்தார். ஆனால், தற்போது, எந்த பகுதியும் போதுமான பாதுகாப்பைக் கொண்டிருக்கவில்லை என்று நினைக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து தெரிவித்த அவர், ‘இந்த ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமையன்று, இத்தகைய தீவிரவாதத் தாக்குதல் நடைபெறும் என்று சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை.

இலங்கையில் எட்டாவதாக குண்டு வெடிப்பு! ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு

இந்த நிகழ்வு பயங்கரமானது. எல்லாரிடம் பெரும் அச்சம் நிலவுகிறது. என்னுடைய அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான இந்தியர்கள் வசிக்கிறார்கள். தைரியமாக வெளியே செல்வதற்கு எல்லோரும் அச்சப்படுகிறார்கள். விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

இலங்கையைச் சேர்ந்த பிரபலமான கிரிக்கெட் வீரர் ரோஷன் மஹாநமா, கொழும்புவிலுள்ள அவரது இல்லத்தில் இருக்கும்போது, குண்டு வெடிப்பு குறித்த தகவலை அறிந்தார். இதுகுறித்து நியூஸ் 18 செய்திக்கு பேட்டி அளித்த அவர், ‘இது அமைதியான ஈஸ்டர் ஞாயிறு. கடந்த 10 வருடங்கள், நாங்கள் அமைதியான வாழ்கையை வாழ பழகிவிட்டோம். எங்களுக்கு எந்த பயமும் இல்லாமல் இருந்தது. இன்றைக்கு என்ன நடந்ததோ, அது பயங்கரமானது. இந்த விவகாரம், எங்களை இங்கிருந்து எங்கே எடுத்துச் செல்லும் என்று எங்களுக்குத் தெரியவில்லை’ என்று தெரிவித்தார்.

இலங்கை குண்டுவெடிப்பில் 160 பேர் உயிரிழப்பு... மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

இதுகுறித்து தெரிவித்த இலங்கைத் தமிழர் விசாகன், ‘இந்த தகவலை நான் ஆரம்பத்தில் நம்பவில்லை. ஏனென்றால், எங்கள் நினைவுகளிலிருந்து தீவிரவாதம் நீண்ட தூரத்துக்குச் சென்றுவிட்டது. எப்பொழுது இது உண்மையான தீவிரவாத தாக்குதல் என்றுநான் உணர்ந்தேனோ, அப்போது சில நிமிடங்கள் நான் உறைந்து நின்றேன். இன்னொருமுறை தீவிரவாதத்தை எங்களால் எதிர்கொள்ள முடியாது. எங்களுடைய அழகான நாடு வளர்ந்துகொண்டிருக்கிறது. பொருளாதாரம் உயருகிறது. தீவிரவாதம் முடிந்துவிடும் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

இலங்கை


இலங்கையில் வாழும் 2 கோடி மக்கள், இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்பு வீழ்த்தப்பட்ட பிறகு, மீண்டும் தீவிரவாதம் தலையெடுக்கும் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. அதனால், மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர். பாதுகாப்பு சோதனைச் சாவடிகள், துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள், இரவு நேர ஊரடங்கு உத்தரவு ஆகியவை மீண்டும் திரும்பிவிடுமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எந்த தீவிரவாத அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து நியூஸ் 18-க்கு பதிலளித்த இலங்கை அரசின் மூத்த அமைச்சர், ‘குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதுதான் எங்களுடைய முதல் நோக்கம். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டும். காவல்துறையினர், இதுதொடர்பாக முழு விசாரணையை நடத்துவார்கள். அது முடிந்தபிறகு, தீவிரவாதிகளைக் கைது செய்வோம்’ என்று தெரிவித்தார்.

Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: