முகப்பு /செய்தி /உலகம் / காவல் நிலைய தலைமையகத்தில் புகுந்த பயங்கரவாதிகள்.. தற்கொலைப் படை தாக்குதல்...!

காவல் நிலைய தலைமையகத்தில் புகுந்த பயங்கரவாதிகள்.. தற்கொலைப் படை தாக்குதல்...!

பாகிஸ்தான் தாக்குதல்

பாகிஸ்தான் தாக்குதல்

கராச்சி காவல்நிலையத் தாக்குதலுக்கு தெரிக்-இ-தாலிபான் பயங்கரவாத குழு பொறுப்பேற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, Indiakarachikarachi

பாகிஸ்தான் மாநிலம் கராச்சியில் உள்ள காவல் நிலைய தலைமையகத்தை பயங்கரவாதிகள் கைப்பற்ற முயற்சித்தனர். காவலர்கள் உடையில் காவல் நிலையத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள், தற்கொலை தாக்குதலை நிகழ்த்தினர். அப்போது மற்ற பயங்கரவாதிகள் காவலர்களை நோக்கி துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளால் தாக்குதல் நடத்தினர்.

தகவல் அறிந்து விரைந்த பாதுகாப்பு படையினர், காவலர்களுடன் இணைந்து பயங்கரவாதிகள் மீது எதிர்தாக்குதல் நடத்தினர். சுமார் நான்கரை மணி நேரம் நீடித்த சண்டையில், பயங்கரவாதிகளிடம் இருந்து காவல்நிலையம் மீட்கப்பட்டது. இந்த தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 காவலர்களும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர்.

மேலும் 22 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், கராச்சி நகர் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தெரிக்-இ-தாலிபான் பயங்கரவாத குழு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தான் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியையும், உள்நாட்டு அரசியல் நெருக்கடியையும் தற்போது சந்தித்து வருகிறது.

அங்கு தற்போது அடிப்படை உணவுக்கே பற்றாக்குறை ஏற்பட்டு விலைவாசி உச்சம் தொட்டுள்ளது. அதேபோல், உள்நாட்டு பயங்கரவாத குழுக்களும், ஆப்கானின் தாலிபான் ஆட்சியாளர்களும் பாகிஸ்தானுக்கு கடும் சாவல்களை தருகின்றனர்.

First published:

Tags: Pakistan News in Tamil, Terror Attack