Video | சர்கஸில் சாகச காட்சிகளுக்கு நடுவே ரிங் மாஸ்டரை தாக்கிய சிங்கம்...!

சர்கஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் பரவசப்பட்டிருந்த நிலையில், சிங்கம் ஒன்று தனக்கு உத்தரவிட்ட ரிங் மாஸ்டரை தாக்கி அனைவரையும் பதற வைத்துள்ளது.

news18
Updated: April 5, 2019, 5:08 PM IST
Video | சர்கஸில் சாகச காட்சிகளுக்கு நடுவே ரிங் மாஸ்டரை தாக்கிய சிங்கம்...!
ரிங் மாஸ்டரை தாக்கிய சிங்கம்
news18
Updated: April 5, 2019, 5:08 PM IST
சர்கஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் பரவசப்பட்டிருந்த நிலையில், சிங்கம் ஒன்று தனக்கு உத்தரவிட்ட ரிங் மாஸ்டரை தாக்கி அனைவரையும் பதற வைத்துள்ளது.

உக்ரைன் நாட்டின் லுகன்ஸ்க் என்ற நகரில் சமீபத்தில் நடந்த சர்கஸ் நிகழ்ச்சியில் ஹமடா கவுடா என்ற எகிப்து ரிங் மாஸ்டர், சிங்கத்தின் தாக்குதலில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

சில சாகச காட்சிகளுக்கான 2 சிங்கங்கள் கூண்டுக்குள் நுழைந்தன. ஒன்று ரிங் மாஸ்டர் ஹமடாவின் பேச்சைக்கேட்டு உட்கார்ந்த நிலையில், மற்றொரு சிங்கம் அவரை நோக்கி பாய்ந்து கையை குறிவைத்து கடிக்கத்தொடங்கியது.


சுற்றியிருந்த பொதுமக்கள் மிகுந்த பதற்றம் அடைந்து கூப்பாடு போடத்தொடங்கினர். சில நிமிடங்கள் சிங்கத்தின் பிடியில் இருந்த ஹபடா, பின்னர் கால்களை கொண்டு சிங்கத்தை தாக்கினார். பின்னர், சிங்கம் அங்கிருந்து மீண்டும் தனது இருப்பிடத்துக்குச் சென்றது.

சம்பவம் தொடர்பாக பேசிய 32 வயதான ஹபடா, “மனிதர்களைப் போல விலங்குகளும் சில நேரங்களில் மனக்குழப்பத்தில் இருக்கும். அதனால், வித்தியாசமாக நடந்து கொள்கிறது” என்று கூறியுள்ளார்.



Loading...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





ஐ.பி.எல் தகவல்கள்:

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...