500 அடி உயர தூணில் ஏறி செல்ஃபி எடுத்த இளைஞர் - காத்திருந்து கைது செய்த போலீசார்

ஸ்காட்லாந்தில் 500 அடி உயரமுள்ள பாலத்தின் தூணில் ஏறி செல்ஃபி எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

500 அடி உயர தூணில் ஏறி செல்ஃபி எடுத்த இளைஞர் - காத்திருந்து கைது செய்த போலீசார்
கோப்புப் படம்
  • Share this:
ஸ்காட்லாந்தின் ஃபோர்த் நதியில் கட்டப்பட்டுள்ள தொங்கு பாலம் பிரபலமானது. இந்த பாலத்தின் மத்தியில் உள்ள பிரமாண்டமான தூணில் இருந்து பாலத்தின் இருபுறத்தையும் இணைக்கும் வகையில் கட்டமைப்பு உள்ளது. இதன் வழியாக தூணின் உச்சிக்கு ஏற சில இளைஞர்கள் முயன்றனர்.

ஆடம் லாக் வுட் என்னும் 19 வயது இளைஞர் ஆபத்தான அந்த தடத்தில் இருபுறமும் உள்ள இரும்பு கம்பிகளைப் பிடித்தவாறு ஏறி உச்சிக்குச் சென்றார். அங்கிருந்து செல்ஃபி எடுத்துக் கொண்ட அவர் தடதடவென கீழிறங்கி வந்தார். சில நேரங்களில் கைப்பிடியை விட்டு விட்டு சரிவான பாதையில் ஆடம் ஓடி வந்த காட்சிகள் காண்போரது நெஞ்சத்தைப் படபடக்க வைத்தன.

ஒருவழியாக கீழிறங்கி வந்த ஆடமை அங்கு காத்திருந்த போலீசார் கைது செய்தனர். குற்றமல்லாத பிரிவில் பொறுப்பற்ற நடத்தைக்காக ஆடம் கைது செய்யப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் படிக்க...உலக கோப்பைக்கு தகுதி - சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் தேதி அறிவிப்பு

போலீஸ் வேனில் ஏறி அமர்ந்த ஆடம் அப்போதும் செல்ஃபி எடுத்து அருகிலிருந்தோரை அதிர வைத்தார்.
First published: July 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading