முகப்பு /செய்தி /உலகம் / வாழ வழியில்லை சம்பளத்தை அதிகரியுங்கள், ஆயுதங்களை வாங்காதீர்கள்- பிரஸல்ஸில் மக்கள் போராட்டம்

வாழ வழியில்லை சம்பளத்தை அதிகரியுங்கள், ஆயுதங்களை வாங்காதீர்கள்- பிரஸல்ஸில் மக்கள் போராட்டம்

பிரஸ்ஸல்ஸில் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்திய மக்கள்

பிரஸ்ஸல்ஸில் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்திய மக்கள்

பிரஸ்ஸல்சில் பத்தாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள், மக்கள் வீதியில் இறங்கி அதிகரிக்கும் விலைவாசியை எதிர்த்தும் சம்பள உயர்வு கேட்டும், ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதற்கு எதிராகவும் போராட்டத்தில் இறங்கினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பிரஸல்சில் பத்தாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள், மக்கள் வீதியில் இறங்கி அதிகரிக்கும் விலைவாசியை எதிர்த்தும் சம்பள உயர்வு கேட்டும், ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதற்கு எதிராகவும் போராட்டத்தில் இறங்கினர்.

ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ அரசியல், அமெரிக்க அரசியல், ரஷ்யாவின் உக்ரைன் மீதான் போரினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அவர்கள் கோஷமிட்டதோடு அமெரிக்க -நேட்டோ படைகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றன, மக்களின் வாழ்வாதாரம் பற்றி அக்கறை இல்லை என்ற குற்றச்சாட்டுகள் கோஷமாக பிரஸ்ஸல்ஸ் தெருக்களில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

சம்பளங்களுக்காக பணத்தை செலவிடுங்கள், ஆயுதம் வாங்க வேண்டாம் என்றும் தொழிலாளர்களுக்கு கூடுதல் மரியாதை, அதிக சம்பளம் வழங்க முன் வாருங்கள் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த ஒருநாள் வேலை நிறுத்தத்தினால் பிரஸ்ஸல்சில் இயல்பு வாழ்க்கை ஏறக்குறைய நின்று போனது என்றே கூற வேண்டும்.

சுமார் 1 லட்சம் வரை போராட்டத்தில் குதித்துள்ளனர், ஆனால் போலீசார் 70,000 பேர் என்று ஊடகங்களிடம் தெரிவித்தனர். பெல்ஜியத்தில் பணவீக்கம் 9% ஆக அதிகரித்தது. உக்ரைன் போரினாலும் ரஷ்யா மீதான தடையினாலும் சப்ளை சங்கிலித் தொடர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டீ குரூ மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை விட பெல்ஜியம் நன்கு பாதுகாப்பாக உள்ளது, பணவீக்கத்துக்குத் தகுந்தவாறு சம்பளம் மாறும் வகை இங்கு தான் உள்ளது என்கிறார்

ஏறக்குறைய விலை உயர்வு, பொருட்களுக்கான செலவீனம் அதிகரிப்புக்கு எதிராக ஐரோப்பா முழுவதும் இதேபோன்ற எதிர்ப்புக்கள் நடந்துள்ளன - ஆயிரக்கணக்கான தொழிற்சங்கவாதிகள் சனிக்கிழமை லண்டனில் அணிவகுத்துச் சென்றனர் - விலை உயர்வுக்குக் காரணம் நேட்டோ மற்றும் அதன் உறுப்பினர்களின் நடவடிக்கைகளே என்று இவர்கள் கோஷமிட்டனர்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார "தற்கொலை" செய்வதாக குற்றம் சாட்டினார், மேலும் இந்த பொருளாதாரத் தடைக் கொள்கையால் ஐரோப்பிய ஒன்றியத்தின் "நேரடி இழப்புகள்" "ஒரு வருடத்தில் $400 பில்லியனைத் தாண்டும்" என்று கடந்த வாரம் கணித்துள்ளார்.

ஆகவே போர், ஆயுதம், விலைவாசி உயர்வு, கார்ப்பரேட் ஆதரவு லாபி அரசுகள் ஆங்காங்கே நெருக்கடிகளை சந்தித்து வருவதாக அரசியல்-பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

First published:

Tags: Brussels, Labor Protest