ஸ்தம்பித்த நியூயார்க் நகரம்... காலநிலை மாற்றத்துக்கு எதிராக லட்சக்கணக்கானோர் போராட்டம்!

அனைத்துப் போராட்டங்களும் அரசுகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிர்த்துக் கேள்வி கேட்பது போன்றதொரி போராட்டமாக நடைபெற்று வருகின்றன.

ஸ்தம்பித்த நியூயார்க் நகரம்... காலநிலை மாற்றத்துக்கு எதிராக லட்சக்கணக்கானோர் போராட்டம்!
பெர்லின் போராட்டம்
  • News18
  • Last Updated: September 21, 2019, 1:39 PM IST
  • Share this:
காலநிலை மாற்றத்துக்கு எதிராக உலக மக்கள் அனைவரும் ஒன்று சேர வலியுறுத்தும் நோக்கில் சர்வதேச அளவில் பல முக்கிய நகரங்களில் மக்கள் லட்சக்கணக்கில் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நியூயார்க் நகரில் ஐநா மாநாடு நடைபெற உள்ளதை அடுத்து நேற்று நியூயார்க் நகரில் லட்சக்கணக்கானோர் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் தொடக்கம் ஆஸ்திரேலியாவில் ஆரம்பித்தது. ஆஸ்திரேலியாவில் சிட்னி மற்றும் கேன்பெரா நகரங்களில் லட்சக்கணக்கில் மக்கள் போராட்ட ஊர்வலம் மேற்கொண்டனர். ஆஸ்திரேலியா க்ரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தை குறைக்க வேண்டும் என அம்மக்கள் வலியுத்தி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவில் ஒட்டுமொத்தமாக 3 லட்சம் மக்கள் சாலைகளில் திரண்டது போராட்டம் சர்வதேச அளவில் வலுப்பெற காரணமானது. அமெரிக்காவில் மட்டும் பல்வேறு முக்கிய நகரங்களிலும் சுமார் 800 போராட்ட ஊர்வலங்களும் ஜெர்மனி 400 ஊர்வலங்களும் நடத்தி வருகிறது.


ஒவ்வொரு ஊர்வலத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வருகின்றனர். இந்தியாவிலும் வீட்டுவசதி வாரிய அமைச்சகம் முன்பு டெல்லி மக்கள், மாணவர்கள் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதேபோல், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளிலும் வரலாறு காணாத போராட்டங்கள் காலநிலையைக் காப்பதற்கு வேண்டி நடைபெற்று வருகிறது. இந்த அனைத்துப் போராட்டங்களும் அரசுகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிர்த்துக் கேள்வி கேட்பது போன்றதொரி போராட்டமாக நடைபெற்று வருகின்றன.

மேலும் பார்க்க: கடலை கண்காணிக்க ரோபோ மீன்... புதிய முயற்சியில் அறிவியல் ஆய்வாளர்கள்!விக்ரம் லேண்டர் தொலைத்தொடர்பு கிடைக்கவில்லை - இஸ்ரோ தலைவர் சிவன்
First published: September 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்