ஹோம் /நியூஸ் /உலகம் /

காவல் நிலையத்தில் சக ஊழியர்களுடன் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்ட பெண் காவலர்.. அதிரடி சஸ்பெண்ட்..!

காவல் நிலையத்தில் சக ஊழியர்களுடன் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்ட பெண் காவலர்.. அதிரடி சஸ்பெண்ட்..!

மாதிரி படம்

மாதிரி படம்

Tennessee cops | விசாரணையில் பெண் காவலர் சக ஊழியர்களுடன் உடலுறவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, Indiatennesseetennesseetennesseetennesseetennessee

அமெரிக்காவில் திருமணமான பெண் காவலர் பணியின் போது சக ஊழியர்களுடன் உறவில் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா டென்னசி பகுதியில் ஒரு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு பணிபுரியும் பெண் காவலர் மேகன் ஹால், தனது சக பணியாளர்களுடன் காவல் நிலையத்தில் பணியில் இருக்கும்போதே பாலியல் உறவில் இருந்துள்ளார். தனது சக ஊழியர்கள் 5 பேருடன் பணியின் இருக்கும்போது  ஆபாச வீடியோக்களை அனுப்புவது, மேலாடையை அகற்றி புகைப்படங்கள் அனுப்புவது, இரவில் விடுதிகளில் தங்குவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வந்தார்.

இதனை அறிந்த பிற ஊழியர்கள் மற்றும் அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், ஹால் மீண்டும் மீண்டும் ஊழியர்களுடன் பணியின் போது தனியாக உடலுறவில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹாலிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஹால் தன் மீதான குற்றத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், ஹால் சக ஊழியர்களுடன் ஆபாச வீடியோக்கள் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ஹால் உட்பட 5 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

First published:

Tags: America, Crime News, Illegal affair