முகப்பு /செய்தி /உலகம் / அதிகமான வெப்பக்காற்று... கடும் பனிப்பொழிவு.. 5 நாட்களில் மாறிய வானிலை... தவிக்கும் அர்ஜென்டினா மக்கள்..!

அதிகமான வெப்பக்காற்று... கடும் பனிப்பொழிவு.. 5 நாட்களில் மாறிய வானிலை... தவிக்கும் அர்ஜென்டினா மக்கள்..!

அர்ஜெண்டினா பனிப்பொழிவு

அர்ஜெண்டினா பனிப்பொழிவு

அர்ஜென்டினாவில் 5 நாள் இடைவெளியில் சுமார் 40 டிகிரியில் இருந்த வெப்ப நிலையில் 8 டிகிரிக்கும் குறைவாக சரிந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, Indiabuenos airesbuenos airesbuenos airesbuenos aires

புவி வெப்பமயமாதல், கால நிலை மாற்றம் போன்ற சிக்கல்களால் கடந்த சில ஆண்டுகளாகவே பூமியின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக பல்வேறு உலக நாடுகள் வெப்பக் காற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. அதேபோல, குறுகிய இடைவெளியிலேயே பருவநிலை துரிதமாக மாற்றத்திற்குள்ளாவது மனிதர்கள் மற்றும் பல்வேறு உயிரினங்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

அதன்படி, அர்ஜென்டினாவில் 5 நாள் இடைவெளியில் தட்பவெட்பமானது இரு உச்சங்களை தொட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே அந்நாட்டில் சுமார் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவி மக்களை தகிக்கவைத்தது. அந்நாட்டின் சராசரி வெப்பத்தை விட இந்தாண்டு அதிக வெப்பம் உணரப்பட்டது. எனவே, பொதுமக்களுக்கு வெப்பக்காற்று எச்சரிக்கை விடப்பட்டது.

லா நினா என்ற தட்பவெட்ப சூழல் காரணமாக அந்நாட்டில் காற்று மற்றும் மண் வழக்கத்தை விட தீவிரமான வறட்சியுடன் காணப்படும் என வானிலை நிபுணர் கிறிஸ்டியன் கராவாக்லியா எச்சரித்தார். இதனால் கடந்த ஞாயிறு வரை கடும் வெப்பத்தில் தவித்து வந்த அர்ஜென்டினாவில், திடீரென பருவம் மாறி பனிப்பொழிவு ஏற்படத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாள்களாக பனிப்பொழிவு ஏற்பட்டதுடன், வியாழக்கிழமை அன்று குளிர் உச்சம் தொட்டு தட்பவெட்பம் 7.9 டிகிரியாக குறைந்து பதிவானது.

இதனால், நான்கே நாட்களில் சுமார் 40 டிகிரியில் இருந்த வெப்ப நிலையில், 8 டிகிரிக்கும் குறைவாக சரிந்தது. குறுகிய நேரத்தில் இத்தகைய தட்பவெட்ப மாறுதலை அர்ஜென்டினா சந்திப்பது இதுவே முதல்முறை. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் தான் இது அதீத தட்பவெட்பத்தை அர்ஜென்டினா சந்திப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

First published:

Tags: Argentina, Climate change, Heat Wave, Snowfall