இஸ்லாமியர்கள் கைதைக் கண்டித்து வீடியோ வெளியிட்ட இளம் பெண்! பக்கத்தை முடக்கிய டிக்டாக்

இஸ்லாமியர்கள் கைதைக் கண்டித்து வீடியோ வெளியிட்ட இளம் பெண்! பக்கத்தை முடக்கிய டிக்டாக்
டிக்டாக் பெண்
  • News18
  • Last Updated: November 27, 2019, 3:32 PM IST
  • Share this:
அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் வெளியிட்ட 40 விநாடி வீடியோவுக்கு அவருடைய கணக்கை டிக்டாக் தடை செய்துள்ளது. இந்தச் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த  இளம் பெண் ஃபெரோசா அசிஸ். அவர், சமீபத்தில் 40 விநாடிகள் ஓடக் கூடிய டிக்டாக் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். பெண்கள் மேக்அப் போடுவது குறித்த செய்முறை போன்று தொடங்கும் வீடியோவில் சீனாவில் இஸ்லாமியர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக விமர்சனம் செய்துள்ளார். அந்த வீடியோவை சுமார் 1.4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

மேலும், 5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இந்நிலையில், ஃபெரோசா அசிஸின் டிக்டாக் கணக்கை அந்நிறுவனம் முடக்கியது.

இதுகுறித்து தெரிவித்துள்ள ஃபெரோசா அசிஸ், ‘டிக்டாக் என்னுடைய பக்கத்தை ஒரு மாதத்துக்கு முடக்கியுள்ளது. இது ஒன்றும் என்னை அமைதிப்படுத்தாது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள டிக்டாக் நிறுவனம், ‘சீனா விவகாரம் குறித்து பேசியதற்காக அவருடைய டிக்டாக் கணக்கு தடை செய்யப்படவில்லை. அவருடைய முந்தைய வீடியோவில் ஒசாமா பின்லேடன் குறித்து வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனால், அவருடைய கணக்கு முடக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see:


 
First published: November 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்