இங்கிலாந்தில் சிரிய அகதி மீது தாக்குதல்: அருவெறுப்பாக இருக்கிறது என வார்னே காட்டம்
இங்கிலாந்தில் சிரிய அகதி மீது தாக்குதல்: அருவெறுப்பாக இருக்கிறது என வார்னே காட்டம்
சிரிய அகதி மீது தாக்குதல் (Twitter)
Teenager Bullies Syrian Refugee At School | வீட்டில் இருந்து வெளியே வரும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் என்று வார்னே காட்டமாக தெரிவித்துள்ளார். #ShaneWarne
இங்கிலாந்து பள்ளியில் சிரிய அகதியான 15 வயது சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அருவருப்பானது என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழல் ஜாம்பவான் வார்னே தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் ஹடர்ஸ்ஃபீல்டு நகரில் உள்ள பள்ளியில் சிரியாவைச் சேர்ந்த அகதியான 15 வயது சிறுவன் மீது சக பள்ளிச் சிறுவன் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஜமால் என்று சிறுவனை, சக பள்ளியைச் சேர்ந்த மற்றொரு சிறுவன் கீழே தள்ளி விடுகிறான். பின்னர் அவன்மீது ஏறி உட்கார்ந்துகொண்டு தண்ணீரை முகத்தில் ஊற்றி ஏதே எச்சரிக்கை விடுவது போன்று தெரிகிறது.
Absolutely disgusting. Do something about this urgently. School should be a safe place away from home for all boys and girls !! https://t.co/6ysJxHBI0g
இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இந்த சம்பவம் முற்றிலும் அருவருக்கத்தக்கது. உடனடியாக ஏதாவது செய்யுங்கள். வீட்டில் இருந்து வெளியே வரும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
பள்ளிச் சிறுவர்களிடையே இதுபோன்ற ஏற்றத்தாழ்வு சம்பவங்கள் நடப்பது மிகவும் கவலைப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
மேலும் பார்க்க...
Published by:Murugesan L
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.