நீங்கள் விதிவிலக்கல்ல.... இளைஞர்களை எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு..!

வயதானவர்களிடம் இருந்தும், உடல்நிலை சரியில்லாதவர்களிடமிருந்தும் விலகி இருங்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

நீங்கள் விதிவிலக்கல்ல.... இளைஞர்களை எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு..!
டெட்ரோஸ் - உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்
  • Share this:
கொரோனாவால் நிகழும் பாதிப்புகள் வலி தருவதாக இருக்கிறது. மற்றவர்களுக்காக உழைக்கும் சுகாதாரப் பணியாளர் ஒருவரின் உயிர் பிரிவது இன்னும் வலி தருவதாக இருக்கிறது என்று கூறியிருந்தார் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயெஸுஸ்.

தொடர்ச்சியாக கொரோனா தொடர்பாக வெளிவரும் பொய்த்தகவல்களையும் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருபவர் டெட்ரோஸ்.

ஜெனீவாவில் இருந்து சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் பேசிய, தலைமை இயக்குநர் டெட்ரோஸ், “இளைஞர்களே, நீங்கள் விதிவிலக்கல்ல. இந்த வைரஸ் உங்களையும் தாக்கலாம். ஒருவேளை நீங்கள் தப்பித்துக்கொண்டாலும் கூட மற்றொருவரின் வாழ்வுக்கும், மரணத்துக்கும் உங்களது தொற்று தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது உங்களுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்க நினைக்கிறேன். நீங்கள் வெற்றிகொள்ள முடியாதவர்கள் அல்ல, உங்களையும் இந்த வைரஸ் வாரக்கணக்கில் மருத்துவமனையில் இருக்க வைக்கலாம் அல்லது நீங்கள் உயிரிழக்கக்கூடும். நீங்கள் நோய் வாய்ப்படவில்லை என்றாலும் வைரஸைப் பரப்புவதில் நீங்களே அதிகமான பங்கு வகிக்கிறீர்கள், வேறு ஒருவருடைய வாழ்க்கை பாதிப்படைவதற்குக் காரணமாக இருக்கிறீர்கள். எனவே, அனைத்து விஷயத்திலும் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். பயணங்களைத் தவிர்த்துவிடுங்கள். வயதானவர்களிடம் இருந்தும், உடல்நிலை சரியில்லாதவர்களிடமிருந்தும் விலகி இருங்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.


First published: March 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்