இசையுலகில் மைக்கேல் ஜாக்சன் சாதனையை முறியடித்த லேடி பாப் சூப்பர் ஸ்டார்!

இசையுலகில் மைக்கேல் ஜாக்சன் சாதனையை முறியடித்த லேடி பாப் சூப்பர் ஸ்டார்!
  • News18 Tamil
  • Last Updated: November 26, 2019, 10:32 AM IST
  • Share this:
அமெரிக்க பாப் சூப்பர் ஸ்டார் டெய்லர் ஸ்விஃப்ட், 29 அமெரிக்க இசை விருதுகளை வென்று, மைக்கேல் ஜாக்சனின் சாதனையை முறியடித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 45 ஆண்டுகளாக அமெரிக்க இசை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2019-ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்றது. வண்ணமயமான பிரமாண்ட விழாவில் பாடகி செலீனா கோம்ஸ் தனது Look at her now ஆல்பத்தை மேடையில் அரங்கேற்றினார்.

இதுவரை 23 விருதுகளை வென்றிருந்த பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் நடப்பாண்டு மட்டும் 6 பிரிவுகளில் விருதுகளை வென்று அசத்தினார். விருது பெற்ற டெய்லர் ஸ்விஃப்ட் ரசிகர்களுக்காக இசை மழையை பொழிந்தார்.


அமெரிக்க இசை உலகின் முடிசூடா மன்னனான மைக்கேல் ஜாக்சன் 24 விருதுகள் வென்றிருந்த நிலையில், அவரது மறைவிற்கு பின் அந்த இலக்கை பலர் விரட்டிவந்தனர். அந்த இலக்கையும் தாண்டி 29 விருதுகளை டெய்லர் ஸ்விஃப்ட் பெற்றுள்ளார்.
First published: November 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்