கருவிழியில் ’டாட்டூ’ முயற்சி... பார்வையை இழந்த மாடல் அழகி..!

கருவிழியில் ’டாட்டூ’ முயற்சி... பார்வையை இழந்த மாடல் அழகி..!
அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா
  • Share this:
போலந்து நாட்டின் மாடல் அழகி ஒருவர் கண்ணில் டாட்டூ போட முயன்று தற்போது தன் கண் பார்வையை இழந்துள்ளார்.

போலந்து நாட்டின் ரோக்லாவ் நகரத்தைச் சேர்ந்த இளம் மாடல் அழகி அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா. இவர் போலந்தைச் சேர்ந்த் பிரபல ராப் பாடகரும் குத்துச் சண்டை வீரருமான போபெக்கின் தீவிர ரசிகை ஆவார். போபேக் தனது 2 கண்களிலும் கருமை நிறத்தில் ’டாட்டூ’ போட்டிருப்பார்.

அவரைப் போன்றே தானும் கண்ணில் டாட்டூ போட்டுக்கொள்ள வேண்டும் என்று விரும்பிய அலெக்ஸாண்ட்ரா, அதெற்கென ஒரு நபரை அணுகியுள்ளார்.


டாட்டூ எனும் பச்சைக்குத்துதலில் முன்னனுபவம் இல்லாதபோதும், பணத்திற்காக அந்த நபரும் பொய் கூறி அலெக்ஸாண்ட்ராவிற்கு கண்ணில் டாட்டூ குத்தி உள்ளார்.

இளம் மாடல் அழகி அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா


டாட்டூ போட்ட உடனேயே அலெக்ஸாண்ட்ரா 2 கண்களும் எரிச்சலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த நபர் அது தற்காலிகமானதுதான் சிறிது நேரத்தில் சரியாகிவிடும் எனக்கூறி, வலி நிவாரணி மருந்து ஒன்றைக் கொடுத்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.இந்த நிலையில், அலெக்ஸாண்ட்ரா தனது இடது கண் பார்வையை இழந்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் மருத்துவர்களை இது தொடர்பாக அணுகியபோது, கண்ணில் கருமை நிற மை அதிகமாகப் பரவிவிட்டதால் இனி இடது கண் பார்வையைத் திரும்பப் பெற முடியாது எனவும், விரைவில் வலது கண் பார்வையையும் இழக்க வாய்ப்பிருப்பதாகவும் அதிர்ச்சியளித்துள்ளனர்.

Also see:
First published: February 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading