சிங்கப்பூரில் சிறப்பாக நடந்த ‘தமிழ் மொழி விழா’...!

மாணவர்கள் தமிழின்பால் கொண்ட பற்றையும், ஆர்வத்தையும் ஊக்கப்படுத்தும் வகையில் ஆய்வு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

news18
Updated: April 24, 2019, 10:54 AM IST
சிங்கப்பூரில் சிறப்பாக நடந்த ‘தமிழ் மொழி விழா’...!
தமிழ் விழா
news18
Updated: April 24, 2019, 10:54 AM IST

அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தினரால் சிங்கப்பூரில் உள்ள உமறுபுலவர் தமிழ்மொழி நிலையத்தில், தமிழ்மொழி விழா சிறப்பாக நடைபெற்றது.  
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக  முன்னாள் மாணவர் சங்கத்தினர், வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவோடு 6வது ஆண்டாக தமிழ்மொழி விழாவை சிங்கப்பூரில் வெற்றிகரமாக நடத்தினர்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழை உயிரோட்டம் மிக்க மொழியாக வருங்கால சந்ததியினருக்கு வழங்கும் காலகட்டத்தில், தகவல் தொழில்நுட்பத்தின் மையமாக விளங்கும் சிங்கப்பூரில் இந்நிகழ்ச்சி நடந்தது சிறப்பு என்று விழா நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

Loading...

 இந்நிகழ்ச்சியின் சிறப்பு பேச்சாளராக  திரு. முத்து நெடுமாறன் அவர்கள் கலந்து கொண்டார்.

எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ் என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.  தொழில்நுட்பத்தில் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை எவ்வாறு உயர்த்துவது, சமூக கூட்டு முயற்சி மற்றும் நம் பயன்பாட்டை அதிகப்படுத்துவதன் மூலமே நம் இலக்கை அடைய முடியும் என்ற சிந்தனைகள் தமிழ்மொழி விழாவில் வலியுறுத்தப்பட்டன.இவ்விழாவின் சிறப்பம்சமாக,  மாணவர்கள் தமிழின்பால் கொண்ட பற்றையும், ஆர்வத்தையும் ஊக்கப்படுத்தும் வகையில் ஆய்வு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

 First published: April 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...