ஆப்கானிஸ்தான் அரசுப் படைகளை ஒடுக்கி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றும் நோக்கில் முன்னேறி வருகிறது தலிபான் படைகள். அமெரிக்க நாட்டு படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியது ஒரு பக்கம் தலிபான்களுக்கு வசதியாக போய்விட்டது. மிகத் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் தலிபான்களிடம் ஆப்கானிஸ்தான் வீழ்ந்து விடுமா என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், தலிபான் படையின் மொத்த வீரர்கள் எத்தனை பேர், அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது, அவர்களின் ஆளுகைக்குள் எத்தனை பகுதிகள் அடங்கியுள்ளன என்பதைப் போன்ற தகவல்களை கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
சமீப நாட்களாக உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் செய்தி எனில் அது கொரோனாவைக் காட்டிலும் தலிபான்கள் பற்றியது தான். உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருக்கும் ஆப்கானிஸ்தானில் காந்தகார் விமான நிலையம், இந்தியா கட்டித்தந்த சல்மா அணை என அடுத்தடுத்த தாக்குதல்கள் மூலம் ஆப்கன் அரசுப் படைகளை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்தையும் கவலைக்கொள்ளச் செய்துள்ளனர் தலிபான்கள். பல பகுதிகளையும் கையகப்படுத்தி தலிபான் ஆட்சியை நிறுவ அவர்கள் போராடி வருகிறார்கள். ஆனால் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி, தலிபான்களின் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை என்று ஆய்வாளர்களும் அதிகாரிகளும் கூறுகின்றனர்.
Also read: அரசு உயர் அதிகாரி துன்புறுத்தியதாக கூறி முகத்தில் மண்ணை எறிந்த ஜூனியர் பெண் அதிகாரி.. வைரல் வீடியோ..
தலிபான் - ஆப்கன் இரு படைகளுக்குமான ஒப்பீடு:
ராணுவம், விமானப்படை, போலீஸ், நுன்னறிவுப் பிரிவினரையும் சேர்த்து ஆப்கன் அரசுப் படைகளின் ஒட்டுமொத்த பலம் கடந்த ஏப்ரல் மாத வாக்கில் 3 லட்சம் பேர் என்று ஆப்கானிஸ்தான் புனரமைப்புக்கான அமெரிக்க சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரல் (SIGAR) அறிக்கை கடந்த வாரம் தெரிவித்தது.
எந்தவொரு நாளிலும் அரசுத் தரப்பின் போர் பலம் என்பது ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் என்று Jonathan Schroden என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் தலிபான்களின் ஒட்டுமொத்த பலம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் ஐநா கண்காணிப்பக தகவல்களின்படி தலிபான் படையில் 55,000 முதல் 85,000 வீரர்கள் இருக்கலாம் என தெரிகிறது.
நிதி:
உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானுக்கு வெளிநாட்டு உதவி முக்கியமானது. ஆப்கன் ராணுவத்துக்கு 5 முதல் 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒரு ஆண்டு செலவாக உள்ளது. இந்த தொகையில் 75% அளவுக்கு அமெரிக்கா அளித்து வருகிறது. இந்த உதவியை அந்நாடு தொடர்ந்து வழங்கும் என்றே உறுதியளித்துள்ளது.
தலிபான்களை பொறுத்தவரையில் தங்களுடைய நிதி தேவையை பிரதானமாக போதைப் பொருள் கடத்தலை வைத்தே பெற்று வருகின்றனர். இது தவிர பிற கிரிமினல் நடவடிக்கைகள் வாயிலாகவும், தங்கள் ஆளுகைக்குள் இருக்கும் மக்களிடம் வரி விதித்தும் நிதி பெறுகின்றனர்.
ஒரு அறிக்கையின்படி, நிதி, படை பலம், ஆயுதங்கள் அல்லது வெடி மருந்து என எந்தவகையில் தலிபான்களுக்கு சிக்கல் ஏற்படவில்லை என தெரியவந்திருக்கிறது.
தலிபான்களுக்கு தேவையான வளங்கள் மற்றும் ஆலோசனைகளை பாகிஸ்தான், ஈரான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் வழங்கிவருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இருப்பினும் இந்த 3 நாடுகளும் அக்குற்றச்சாட்டை மறுத்திருக்கின்றன.
Also read: திடீரென திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. மணமகன் வீட்டாரை அடித்துவிரட்டிய பெண் வீட்டார்
ஆயுதங்கள்:
2001ம் ஆண்டு முந்தைய தலிபான் அரசை வீழ்த்திய பின்னர் ஆப்கன் ராணுவத்தை பலப்படுத்த கோடிக்கணக்கான பணத்தை அமெரிக்கா செலவிட்டுள்ளது.
இதன் காரணமாக ஆப்கன் அரசுப் படைகளிடம் தலிபான்களை காட்டிலும் தொழில்நுட்ப வகையில் உயர்ந்தவர்கள். அவர்களிடம் பல நவீன ரக ஆயுதங்கள் உள்ளன. குறிப்பாக மேற்கத்திய ஆயுதங்கள், நவீன இயந்திர துப்பாக்கிகள், இரவு நேர பார்வை கண்ணாடிகள், கவச வாகனங்கள், சிறிய ட்ரோன்கள் போன்றவை உள்ளன.
மேலும் தலிபான்களிடம் இல்லாத ஒரு முக்கிய பலமும் ஆப்கன் ராணுவத்துக்கு இருக்கிறது. ஆம் அது தான் விமானப் படை. ஆப்கன் விமானப்படையில் 167 விமானங்கள் உள்ளன. இதில் தாக்குதலை தொடுக்கும் ஹெலிகாப்டர்களும் அடங்கும்.
Also read: ஆப்கனில் இந்தியா கட்டிக் கொடுத்த ₹2000 கோடி மதிப்பிலான சல்மா அணை மீது தலிபான்கள் தாக்குதல் முயற்சி
அதே நேரத்தில் தலிபான்கள் சிறிய மற்றும் இலகு ரக ஆயுதங்களையே பயன்படுத்தி வருகின்றனர். இதைப் பயன்படுத்தியே கடந்த சில தசாப்தங்களாக அவர்கள் மிரட்டி வருகின்றனர். அதில் குறிப்பாக சோவியத் ரஷ்யாவின் ஏகே 47 ரக இயந்திர துப்பாக்கிகளை கள்ளச்சந்தையில் இருந்து வாங்கி அதிக அளவில் குவித்து வைத்திருக்கிறார்கள்.
இது தவிர தலிபான்களிடம் குறி பார்த்து சுடும் துப்பாக்கிகள், வேறு சில இயந்திர துப்பாக்கிகள், ராக்கெட்டால் செலுத்தப்படும் கன்னிவெடிகள், சிறிய ரக ராக்கெட்கள், மற்றும் சில விமானம் மற்றும் கவச வாகன எதிர்ப்பு ஆயுதங்களையும் வைத்திருப்பதாக 2019ம் ஆண்டு தலிபான்கள் குறித்து Antonio Giustozzi எழுதிய புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
தற்கொலைப் படையினரும், பிளாஸ்டிக் வெடிகுண்டுகளுமே ஆப்கன் படையினருக்கு எதிராக தலிபான்களிடம் இருக்கும் பேராபத்தை விளைவிக்கக் கூடிய ஆயுதங்கள்
ஒற்றுமை மற்றும் மன உறுதி:
ஆப்கானிஸ்தான் படைகள் பல ஆண்டுகளாக தங்கள் நம்பிக்கையை சோதித்து வந்திருக்கிறார்கள், அதிக உயிர் இழப்புகள், ஊழல், கைவிடுதல்கள் மற்றும் இப்போது வெளிநாட்டு துருப்புக்கள் வெளியேறியது வரையிலும் அவர்கள் பல விஷயங்களை பார்த்துவிட்டனர்.. போதிய திட்டமிடுதல் இன்மையும், தலைமையும் கூட ஆப்கன் படையினருக்கு பின்னடைவாக இருந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சமீபத்திய ஆண்டுகளில் தலிபான்களுக்குள் பிளவுகள் இருப்பதாக பல தகவல்கள் இருந்தபோதிலும் தலிபான்கள் அதிக ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர், மத ஆர்வத்தையும், பொருள் ஆதாயத்தின் பங்களிப்பையும் தலிபான்களின் ஒற்றுமைக்கான காரணிகளாக சுட்டிக்காட்டினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Afghanistan, Taliban