ஆப்கானிஸ்தானில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என தாலிபான்கள் கூறினாலும், தங்கள் எதிரிகளை அவர்கள் வீடு வீடாக சென்று தேடி வருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது. தங்களுக்கு எதிர் கருத்து கொண்ட ஊடகவியலாளர்கள், நேட்டோ படையில் பணியாற்றியவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களை தாலிபான்கள் பட்டியல் போட்டு வேட்டையாடத் தொடங்கியுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, பேஸ்புக்கில் தங்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவிடும் நபர்களை, தேடும் பணியை தாலிபான்கள் மேற்கொண்டுள்ளனர். இதையறிந்த பேஸ்புக் நிறுவனம், பெயர்களை கொண்டு தேடும் வசதியை ஆப்கானிஸ்தானில் இருக்கும் கணக்குகளுக்கு உடனடியாக நீக்கியுள்ளது. இன்ஸ்டாகிராமிலும் இந்த பாதுகாப்பு முறையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் நேட்டோ படைகள் பயன்படுத்திய HIIDE எனப்படும், பயோமெட்ரிக் கருவிகள் சிலவற்றை தாலிபான்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அதில்,
ஆப்கானிஸ்தான் மக்கள் பலரின் கை ரேகை, ரெட்டீனா மற்றும் புகைப்படங்களை நேட்டோ படையினர் சேமித்து வைத்துள்ளனர்.
தங்களுக்கான ஒப்பந்ததாரர்கள் மற்றும் உள்ளூரில் அமெரிக்க ராணுவத்தோடு பணிபுரிபவர்களை அடையாளம் காண, இந்த கருவிகள் பயன்படுத்தபட்டு வந்தன. அவற்றில் சிலவற்றை கொண்டு தான் தாலிபான்கள், வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயோமெட்ரிக் தரவுகள் கிடைத்திருந்தாலும் அதைப் பயன்படுத்தும் திறன் தாலிபான்களுக்கு இருப்பது சந்தேகமே என அமெரிக்க ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட தரவுகள் அனைத்தும் பென்டகனில் தானியங்கி பயோமெட்ரிக் அடையாளம் எனப்படும், சிக்கலான அமைப்பில் சேமிக்கப்பட்டு இருப்பதால், தாலிபான்கள் அவற்றை அணுக சாத்தியமில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
90-களில் ஆட்சியை பிடித்த போது இணைய வசதியை தடை செய்த அதே தாலிபான்கள் தான், தற்போது அதன் மூலமாகவே தங்களின் எதிரிகளை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
இதனிடையே, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் விட்டுச் சென்ற ராணுவத் தளவாடங்களை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதால், அவற்றை வான்வழியாக குண்டுபோட்டு அழிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், செப்டம்பர் முதல் வாரத்தில் புதிய அரசை அமைப்பது குறித்து தாலிபான்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து வரும் நிலையில், ஆப்கானில் வடக்கே அமைந்துள்ளது போல் இ ஹசார், தேஷ் சலாஹ், குவாசான் ஆகிய 3 மாவட்டங்களை தாலிபான்களிடம் இருந்து கிளர்ச்சியாளர்கள் குழு ஒன்று கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.