ஹோம் /நியூஸ் /உலகம் /

புர்கா அணியலையா? வெளியே நில்லுங்க - கல்லூரி மாணவிகள் மீது கடுமைகாட்டும் தலிபான்கள்!

புர்கா அணியலையா? வெளியே நில்லுங்க - கல்லூரி மாணவிகள் மீது கடுமைகாட்டும் தலிபான்கள்!

புர்கா அணியவேண்டும் என்ற தலிபான்கள் கூறும் விதிமுறைகளை இம்மாணவிகள் பின்பற்றவில்லை எனக்கூறி பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயிலுக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

புர்கா அணியவேண்டும் என்ற தலிபான்கள் கூறும் விதிமுறைகளை இம்மாணவிகள் பின்பற்றவில்லை எனக்கூறி பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயிலுக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

புர்கா அணியவேண்டும் என்ற தலிபான்கள் கூறும் விதிமுறைகளை இம்மாணவிகள் பின்பற்றவில்லை எனக்கூறி பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயிலுக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • interna, IndiaAfganisthanAfganisthanAfganisthan

  ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான தலிபான்களின் அடக்குமுறை தொடரும் நிலையில், தலைநகர் காபூலில் புர்கா அணியாததற்காக மாணவிகளை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய விடாமல் தலிபான் காவலர்கள் தடை விதித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இந்த சம்பவம் வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள படக்ஷான் பல்கலைக்கழகத்தில் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்கள் கட்டாயம் புர்கா அணியவேண்டும் என்ற தலிபான்கள் கூறும் விதிமுறைகளை இம்மாணவிகள் பின்பற்றவில்லை எனக்கூறி பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயிலுக்கு வெளியே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெண்களின் நடமாட்டம், பேச்சு, கருத்து, வேலை வாய்ப்புகள், உடை போன்றவற்றின் மீதான தலிபான்களின் கட்டுப்பாடு இத்துடன் முடிவடையவில்லை என்பதும், போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதில் இருந்து 6-ஆம் வகுப்பில் இருந்து பெண்கள் பள்ளிக்குச் செல்வதையும் தலிபான் குழு தடை செய்துள்ளது கட்டுப்பாட்டின் உச்சக்கட்டம் என பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  இதையும் படிங்க..  85 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த அமெரிக்க பயணியின் கேமராக்கள்.. புதைந்திருக்கும் பொக்கிஷம் - கனடாவின் பனிமலையில் மீட்பு

  பயங்கரவாத அமைப்பினரின் வன்முறை, மாணவர்கள் மீதான சட்டத்திற்கு புறம்பான நடத்தை குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும், மாணவிகளின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும் படக்ஷான் பல்கலைக்கழகத்தின் தலைவர் நகிபுல்லா காசிசாதா கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு, அவர்கள் உடனடியாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை பறிக்கத் தொடங்கினர். தலிபான் ஆட்சிக்கு வந்த முதல் வாரத்தில் இருந்தே பெண்கள் தெருக்களில் இறங்கிப் போராடத் தொடங்கியதையும் நாம் அவ்வப்போது பார்த்துவருகிறோம்.

  கடந்த மாதத்தின் தொடக்கத்தில், மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் மாகாணத்தில் பெண்கள் தலைமையிலான போராட்டங்கள் நடைபெற்று, அது பல மாகாணங்களில் கிடுகிடுவென பரவியது குறிப்பிடத்தக்கது. Human Rights Watch-அமைப்பின் கூற்றுப்படி, தலிபான்களின் பதில் ஆரம்பத்தில் இருந்தே மிருகத்தனமாக இருந்ததாகவும், எதிர்ப்பாளர்களை தாக்கி, எதிர்ப்புகளை சீர்குலைத்து, ஆர்ப்பாட்டங்களில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தி சட்டத்திற்கு புறம்பான பல விஷயங்களை செய்து வந்தனர் என்று கூறியுள்ளது.

  தங்களுக்கு எதிரான அங்கீகரிக்கப்படாத போராட்டங்களையும் தலிபான்கள் தடை செய்தனர். காலப்போக்கில், தலிபான்களின் அட்டகாசங்கள் அதிகரித்தன. குறிப்பாக, ஜனவரி 16 அன்று காபூலில் நடந்த போராட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தலிபான் உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பாளர்களை அச்சுறுத்தி, மிரட்டி, உடல்ரீதியாக துன்புறுத்தி, மற்றும் ஷாக் கொடுக்கும் மின்சார சாதனங்களைப் பயன்படுத்தினர் என்றும் கூறப்படுகிறது.

  ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆட்சி கவிழ்ந்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சண்டைகள் முடிவுக்கு வந்தாலும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல்கள் இன்னும் தொடர்கின்றன.

  இது தவிர, நாட்டில் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது ஆப்கானியர்களுக்கு புதிய சவாலாக தற்போது உருவெடுத்துள்ளது. மூன்று மாதங்களுக்கும் குறைவான இந்த குறுகிய காலத்தில், உணவுப் பொருட்களின் விலை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளதாக அந்நாட்டில் இருந்து செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.

  Published by:Archana R
  First published:

  Tags: Afghanistan, Taliban