தலிபான்களுக்கு பயந்து ஆப்கான் ராணுவ வீரர்கள் வேறு நாடுகளுக்கு ஓட்டம்

தாலிபன்கள்

அமெரிக்க ராணுவம் வெளியேறியதால் அம்போ என்று விடப்பட்ட ஆப்கான் ராணுவத்தினர் தாலிபான்களின் பதிலடிக்காகவும் பழிவாங்கலுக்காகவும் அஞ்சி பாகிஸ்தானில் தஞ்சம் பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 • Share this:
  அமெரிக்க ராணுவம் வெளியேறியதால் அம்போ என்று விடப்பட்ட ஆப்கான் ராணுவத்தினர் தலிபான்களின் பதிலடிக்காகவும் பழிவாங்கலுக்காகவும் அஞ்சி பாகிஸ்தானில் தஞ்சம் பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

  ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான போரில் அந்த நாட்டு ராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்க படைகள் தற்போது அங்கிருந்து வெளியேறி விட்டன. இதன் காரணமாக அங்கு தலீபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

  முழு ஆப்கானிஸ்தானையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக அண்டை நாடுகளுடனான எல்லை பகுதிகளை கைப்பற்றுவதில் அவர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

  Also Read: Vijay Mallya : விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  அந்த வகையில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு நிலைமை மோசமாகி வருகிறது.இந்த நிலையில் தாலிபன் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து ஆப்கானிஸ்தானை சேர்ந்த 46 ராணுவ வீரர்கள் தங்கள் நாட்டில் தஞ்சம் புகுந்து உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

  Also Read: குட்டி மீராபாய் சானு: இன்ஸ்பிரேஷன்னா இதுதான் - சானுவை அசத்திய சிறுமியின் வைரல் வீடியோ

  5 ராணுவ அதிகாரிகள் உள்பட 46 வீரர்கள் எல்லையை கடந்து தங்கள் நாட்டுக்குள் வந்து அடைக்கலம் கோரியாதாகவும், ராணுவ விதிமுறைகளின்படி அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கியதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஏற்கெனவே ஜூலை 5ம் தேதி தலிபான்கள் தாக்குதலில் பயந்து போய் 1,000 ஆப்கான் ராணுவ வீரர்கள் தாஜிகிஸ்தானுக்கு ஓடியதும் நடந்தது.

  அமெரிக்கா, பிரிட்டன் படைகள் அங்கிருந்து வாபஸ் பெற்று எந்த ஒரு தீர்வும் தராமல் அம்போவென்றி விட்டு விட்டு ஆப்கானிலிருந்து சென்றதால் தலிபான்கள் வெற்றி முழக்கமிட்டு வருகின்றனர், ‘நாங்கள் வென்று விட்டோம், அமெரிக்கா தோற்று விட்டது’ என்ற முழக்கமே அது.
  Published by:Muthukumar
  First published: