Home /News /international /

பொறுமைக்கும் எல்லை உண்டு.. பாகிஸ்தானுக்கு தாலிபான் எச்சரிக்கை!

பொறுமைக்கும் எல்லை உண்டு.. பாகிஸ்தானுக்கு தாலிபான் எச்சரிக்கை!

பொறுமைக்கும் எல்லை உண்டு.. பாகிஸ்தானுக்கு தாலிபான் எச்சரிக்கை!

பொறுமைக்கும் எல்லை உண்டு.. பாகிஸ்தானுக்கு தாலிபான் எச்சரிக்கை!

தெரிக்-இ-தாலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தியதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால், இந்த தாக்குதலில் ஆப்கான் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

    தங்கள் நாட்டில் பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியதற்கு தாலிபான் அரசு கடுமையான கண்டணத்தை பதிவிட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானின் தாலிபான் அமைப்பு தனது அண்டை நாடான பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லை பகுதிகளில் சில நாள்களாக மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கிளர்ச்சி பயங்கரவாத படையான தெரிக்-இ-தாலிபான் அமைப்பு பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மற்றும் க்னார் ஆகிய பிராந்தியங்களில் வான்வழி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதல் தெரிக்-இ-தாலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தியதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால், இந்த தாக்குதலில் ஆப்கான் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 40 தாண்டியதாக ஆப்கான் தரப்பு தெரிவிக்கிறது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு எதிராக ஆப்கான் மக்கள் வீதிகளில் இறங்கி பெரும் போராட்டங்களை நடத்தினர்.

    இந்நிலையில், பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு ஆளும் தாலிபான் அமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. தாலிபான் அரசின் செய்தித்தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் இது குறித்து கூறுகையில், "ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில் பாகிஸ்தான் நடத்திய வான் தாக்குதலை ஆப்கான் அரசு வன்மையாக கண்டிக்கிறது.

    also read : இன்னும் சில மாதங்களில் மீண்டும் சேவையைத் தொடங்குவோம் - ஜெட் ஏர்வேஸ் CEO தகவல்

    ஆப்கான் அரசின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என பாகிஸ்தானிடம் தெரிவித்து கொள்கிறோம். இது போன்ற தவறுகள் இனி தொடர வேண்டாம். இல்லையேல் உரிய விளைவுகளை பாகிஸ்தான் சந்திக்க நேரிடும். இரு நாடுகளின் பிரச்னைகளை அரசியல் ரீதியாக பேச்சு வார்த்தையின் மூலமே தீர்க்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

    பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்து எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து புதிய ஆட்சியை அமைத்துள்ளன. புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரிப் பதவியேற்றுள்ளார். புதிய ஆட்சி அமைத்த உடன் ஆப்கானிஸ்தானில் இது போன்ற ராணுவ தாக்குதல் நடைபெறுவது சர்வதேச அரசியல் அரங்கில் உற்று நோக்கப்படுகிறது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Afganistan, Taliban

    அடுத்த செய்தி