ஹோம் /நியூஸ் /உலகம் /

படிப்பு வேணும்.. போராடும் பெண்கள்.. அடித்து விரட்டும் தலிபான்கள்.. என்ன நடக்குது ஆப்கானிஸ்தானில்?

படிப்பு வேணும்.. போராடும் பெண்கள்.. அடித்து விரட்டும் தலிபான்கள்.. என்ன நடக்குது ஆப்கானிஸ்தானில்?

வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும் பெண்கள்

வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும் பெண்கள்

போராட்டங்கள் நாடு முழுவதும் பரவி வருவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆப்கனிஸ்தானில் பெண்களுக்கு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலவும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு கட்டுபாடுகளை கொண்டு வந்துள்ளனர். குறிப்பக பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை தலிபான் அரசு விதித்துள்ளதால் அந்நாட்டு பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பெண்களுக்கு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலவும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. இதற்கு மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து ஆப்கனிஸ்தான் முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் எலும்பை உறைய வைக்கும் குளிர்.. சமாளிக்க முடியாமல் 22 பேர் பலி!

 உயர்கல்வி தடைக்கு எதிராக பெண்கள் ஹெராத் நகரில் கல்வி எங்களின் உரிமை என்று முழக்கங்கள் எழுப்பியபடி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மாகாண ஆளுநரின் இல்லத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர்.

அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் கலைந்து செல்லாததால், பாதுகாப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டியடித்தனர். இதனால் ஆப்கானிஸ்தனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் போராட்டங்கள் நாடு முழுவதும் பரவி வருவதால் அங்கு பதற்றமான சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.


First published:

Tags: Afganistan, Taliban