• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஆப்கானிஸ்தான் ஆட்சியை கைப்பற்றுகிறது தாலிபான்- அதிகாரத்தைக் கொடுக்கத் தயாரான அரசு

ஆப்கானிஸ்தான் ஆட்சியை கைப்பற்றுகிறது தாலிபான்- அதிகாரத்தைக் கொடுக்கத் தயாரான அரசு

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தாலிபான்களுக்கு வழங்க அந்நாட்டின் அதிபர் முகம்மது அஷ்ரப் கானி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

  • Share this:
    அமெரிக்க படைகள் வெளியேற்றத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாகவே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருக்கிறது. ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. தலிபான்களை சமாளிக்க முடியாமல் அரசு படைகள் திணறி வருகின்றன. தலிபான்களோ முக்கிய நகரங்களை கைப்பற்றி முன்னேறி வருகின்றனர். தலிபான்கள் வசம் ஆப்கானின் பெரும்பகுதி சென்றுவிட்ட நிலையில், இதில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது பெண்கள்தான்.

    ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கிய காலத்தில் பெண்கள் பலரும் துப்பாக்கியுடன் வீதிகளில் இறங்கி அரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இருப்பினும், அமெரிக்க படைகள் திரும்பிய பிறகு, ஆப்கானிஸ்தான் அரசால் தாலிபான்களை எதிர்த்து போரிட முடியவில்லை. தாலிபான்கள் மிக விரைவாக ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினர். ந்தூஸ், தலுகான், நிம்ருஸ், செபர்கான், சாரஞ், சமங்கன், புல்-இ-கும்ரி, தக்கார் உட்பட 10 மாகாணங்களின் தலைநகரங்களை கைப்பற்றிய தலிபான் அமைப்பினர் அதனை தொடர்ந்து கந்தகாரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இன்று காலை ஜலாலாபாத் நகரையும் தலிபான்கள் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர். எவ்வித தாக்குதலும் நடத்தாமலேயே ஜலாலாபாத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். அந்நகரின் ஆளுநர் தலிபான்களிடம் சரண் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜலாலாபாத்தை கைப்பற்றியதன் மூலம் பாகிஸ்தானுடன் இணைக்கும் சாலைகள் தற்போது தலிபான் வசம் வந்துள்ளது.

    மொத்தமுள்ள 34 மாகாண தலைநகர்களில் 23 தலைநகர்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். எஞ்சியுள்ள ஒரு முக்கிய நகரம் காபூல் மட்டுமே. அதனையும் கைப்பற்றிய தலிபான்கள் வேகமாக முன்னேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலைச் சுற்றி தாலிபான்கள் சூழ்ந்துள்ளனர். இருப்பினும், தாலிபான் வீரர்கள் தற்போது காபூலுக்குள் நுழைய வேண்டாம் என்று தாலிபான்கள் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.

    மக்கள் அதிகம் வாழும் காபூல் நகரில் உள்ளூர் மக்களுக்கு ஆபத்து நேரலாம் என்று கருதி, நகரின் எல்லைகளிலேயே தயாராக காத்திருக்குமாறு தமது போராளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தாலிபன்கள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.

    அதில், தற்போதைக்கு நகரின் பொறுப்பு அரசிடமே உள்ளது. அமைதியான வழியில் ஆட்சிப்பொறுப்பை அரசு ஒப்படைப்பது தொடர்பாக அதனுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில், முகமது அஷ்ரப் கானி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு, ஆட்சி அதிகாரத்தை தாலிபான்களுக்கு கொடுப்பதற்கு தயாராகிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இருப்பினும், தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை பெறுவதற்கு தயாராக இல்லை. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்கள் யோசித்து வருகின்றனர் என்று தெரிகிறது. இருப்பினும், அவர்கள் காபூலில் எந்த வன்முறை சம்பவத்திலும் ஈடுபடவில்லை. இதுகுறித்து தெரிவித்த ஆப்கானிஸ்தான் அமைச்சர் அப்துல் சட்டார் மிர்சக்வால், ‘அமைதியான முறையில் ஆட்சி அதிகாரம் மாற்றம் செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார். காபூலிலுள்ள இந்தியத் தூதரகத்திலுள்ள இந்திய அதிகாரிகளை இந்தியாவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: