ஹோம் /நியூஸ் /உலகம் /

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவி: தலிபான்கள் நன்றி

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவி: தலிபான்கள் நன்றி

இந்தியாவுக்கு தலிபான் நன்றி

இந்தியாவுக்கு தலிபான் நன்றி

1.6  மெட்ரிக் டன்  உயிர் காக்கும் மருத்துவ கருவிகளை ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கியது. கடந்த சனிக்கிழமையன்று டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் இந்த உயிர்காக்கும் மருத்துவ கருவிகள் ஆப்கானிஸ்தானுக்கு சென்றன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஊட்டச்சத்து குறைப்பாட்டால் ஆப்கானிஸ்தான் குழந்தைகள் தவித்துவரும் சூழலில் உயிர்காக்கும் பொருட்களை இந்தியா அந்நாட்டுக்கு அனுப்பியது. இதையடுத்து இந்தியாவுக்கு தலிபான்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

  பொருளாதார பாதிப்பில் சிக்கியிருந்த ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கைகளுக்கு சென்ற பின்னர் மேலும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 1.6  மெட்ரிக் டன்  உயிர் காக்கும் மருத்துவ கருவிகளை ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கியது.

  கடந்த சனிக்கிழமையன்று டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் இந்த உயிர்காக்கும் மருத்துவ கருவிகள் ஆப்கானிஸ்தானுக்கு சென்றன.  இது தொடர்பாக இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஃபரித் மாமுண்ட்சாய் ட்விட்டரில், இந்த இக்கட்டான நேரத்தில் பல ஆப்கானிய குடும்பங்களுக்கு இந்த உதவி உதவும் என்று நன்றி தெரிவித்தார்.

  “எல்லா குழந்தைகளுக்கும் ஒரு சிறிய உதவி, ஒரு சிறிய நம்பிக்கை மற்றும் அவர்களை நம்பும் ஒருவர் தேவை. இந்தியாவில் இருந்து முதல் மருத்துவ உதவித் தொகை இன்று காலை காபூலுக்கு வந்தடைந்தது. இந்த இக்கட்டான நேரத்தில் 1.6 மெட்ரிக் டன் உயிர்காக்கும் மருந்துகள் பல குடும்பங்களுக்கு உதவும்" இந்திய மக்களிடமிருந்து பரிசு" என்று ட்விட் செய்துள்ளார்.

  இதையும் படிங்க: வேகமாக பரவும்..தடுப்பூசியின் வீரியத்தை குறையச் செய்யும்: ஒமைக்ரான் குறித்து உலக சுகாதார நிறுவனம் தகவல்

  Published by:Murugesh M
  First published:

  Tags: Afghanistan, India, Taliban