• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி.. என்ன நடந்தது ஆப்கானிஸ்தானில்?

20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி.. என்ன நடந்தது ஆப்கானிஸ்தானில்?

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

தலிபான்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மத்தியில் நடந்த 2,400 அப்பாவி பொதுமக்கள் இருந்துள்ளன என ஐநா அதிகாரபூர்வமாக அறிவித்தது.

  • Share this:
ஆப்கானிஸ்தான் தலைநகரம் காபூலை தாலிபான் படைகள் நேற்று இரவு கைப்பற்றியது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து பின் வாங்க தொடங்கிய பிறகு தாலிபான்கள் தங்களது வேலையை காண்பித்தனர். அமெரிக்கப் படைகள் பின் வாங்கியதால், ஆப்கான் படை வீரர்கள் தாலிபான்களை சமாளிக்க முடியாமல் திணறி தோற்றுப்போனார்கள். இந்த நிலையில், ஏப்ரல் மாதம் 14-ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்கள் படைகளை திரும்பப்பெறுவோம் என்று கூறிய பிறகு ஆப்கானில் நடந்தது என்ன? தேதி வாரியாக பார்க்கலாம்.

என்ன நடந்தது ஆப்கானிஸ்தானில்?

ஏப்ரல் 14:
ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்புவதற்காக அமெரிக்க படைகளை திரும்ப பெறுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.

அமெரிக்கப்படைகள்


மே 1:
அமெரிக்கப்படைகள் தெற்கு பகுதிகளில் இருந்து தங்களது தளங்களை காலிசெய்யத் துவங்கின.

மே 5:
ஹெல்மாண்ட் உள்ளிட்ட தெற்கில் இருக்கும் 6 மாகாணங்களில் இருக்கும் ஆப்கான் படைகள் மீது தாலிபான் தாக்குதலை துவங்கியது.

தாலிபான்கள்


மே 11: காபூலுக்கு மிக அருகில் இருக்கும் நேர்க்ஹ் என்கிற மாகாணத்தை கைப்பற்றியது தாலிபான்.

தாலிபான்கள்


ஜூன் 7: 24 மணி நேரத்தில் 150 ஆப்கான் படை வீரர்கள் தாலிபானால் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஆப்கான் அரசு அறிவித்தது, 34 மாகணங்களில்  26 மாகாணங்களை தாலிபான் கைப்பற்றியது.

ஜூன் 22: தனது கட்டுப்பாட்டில் இதுவரை இல்லாத ஆப்கானிஸ்தானின் வட பகுதிகளையும் தாலிபான் கைபற்றியுள்ளதாக ஐநாவின் ஆப்கான் பிரிவு அறிவித்தது.

அமெரிக்க படைகள்


ஜூலை 2:மிகவும் முக்கியமான பக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து அமெரிக்கப் படைகள் முற்றிலும் பின்வாங்கின.

ஜூலை 5:ஆகஸ்ட் மாதம் ,தங்கள் அமைதி கடிதத்தை ஆப்கான் அரசிடம் வழங்குவோம் என தாலிபான் உறுதியளித்தது.

ஜூலை 25: தாலிபான்களை தடுத்து நிறுத்த ,அமெரிக்கா ஆதரவு கொடுப்பதாக மீண்டும் தெரிவித்தது.

ஜூலை 26: தாலிபான்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மத்தியில் நடந்த 2,400 அப்பாவி பொதுமக்கள் இருந்துள்ளனர் என ஐநா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Zaranj


ஆகஸ்ட் 6: தெற்கில் zaranj என்கிற மாகாணத்தை முழுமையாக தாலிபான் கைப்பற்றி ,தனது கொடியை ஏற்றியது.

தாலிபான்கள்


ஆகஸ்ட் 13: அருகில் இருக்கும் அனைத்து மாகாணத்தையும் சுற்றி வளைத்து, காபூலுக்குள் செல்ல தாலிபான் தயாரானது.

காபூலில் தாலிபான் தலைவர்கள்


ஆகஸ்ட் 15: காபூலை முழுமையாக சுற்றிவளைத்த பின்னர், தாலிபான்களுக்கும், அரசு தரப்பிற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமான முடியாத நிலையில் அதிபர் வெளியேறுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து அதிபர் மாளிகையை முழுமையாக கைப்பற்றியது தாலிபான்.

அஷ்ரப் கனி


இதனை தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கணி, நாட்டை விட்டு வெளியேறி ,ஓமன் வழியாக அமெரிக்கா செல்லவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அஷ்ரப் கணி ஆஃப்கானிஸ்தானை விட்டு தப்பிச் சென்று தஜிகிஸ்தானில் தஞ்சமடைந்தார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: