Home /News /international /

எங்களது 20 ஆண்டு கால சாதனைகளுக்கு தற்போது பெரும் ஆபத்து - ஆப்கான் விஞ்ஞானிகள் வேதனை!

எங்களது 20 ஆண்டு கால சாதனைகளுக்கு தற்போது பெரும் ஆபத்து - ஆப்கான் விஞ்ஞானிகள் வேதனை!

மாதிரி படம்

மாதிரி படம்

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிகழ்வு, அறிவியல் ஆராய்ச்சி துறைக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்

தாலிபான் அமைப்பினர் தற்போது ஆப்கானிஸ்தானில் முழுமையாக கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். அமெரிக்கா உட்பட வெளிநாடு ராணுவ படைகள் அனைத்தும் ஆகஸ்ட் 30ம் தேதியோடு வெளியேறியுள்ள நிலையில், தலைநகர் காபூலில் அமைந்துள்ள சர்வதேச விமானநிலையத்தை கைப்பற்றி ஆப்கானிஸ்தானை தங்களது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பழமைவாதத்தை மட்டுமே முன்னிறுத்திய கடந்த கால தாலிபான் ஆட்சியின் கொடூரம், தற்போது மக்களை அச்சத்தின் பிடியில் வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 1996-2001 வரையில் நடைபெற்ற தாலிபான்கள் ஆட்சியின் போது,இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் பழமைவாத பதிப்பை நாடு முழுவதும் கொடூரமாக அமல்படுத்தி இருந்தனர் தாலிபான்கள். அதன்படி பெண்ணுரிமை முற்றிலும் பறிக்கப்பட்டது, கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்டது. இந்த ஆட்சியின் போது மெத்த படித்து புத்தி கூர்மையுடன் இருந்த பல அறிவாளிகள், தாலிபான்களின் சித்தாந்தத்திற்கு எதிராக இருந்ததால் தூக்கிலிடப்பட்டனர் அல்லது சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் மீண்டும் ஆட்சி தாலிபான்கள் வசம் சென்றிருப்பதை அந்நாட்டு மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. இதனிடையே ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிகழ்வு, அறிவியல் ஆராய்ச்சி துறைக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று அறிவியல் இதழான நேச்சர் கூறி இருக்கிறது. காபூலில் உள்ள கடேப் பல்கலைக்கழகத்தின் (Kateb University) பொது சுகாதார விஞ்ஞானியான அதாவுல்லா அஹ்மத், நேச்சர் இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், "கடந்த 20 ஆண்டுகளில் நாங்கள் செய்த சாதனைகள் அனைத்தும் தற்போது பெரும் ஆபத்தில் சிக்கி உள்ளன" என்று மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

2001-ல் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி மற்றும் 2004-ம் ஆண்டில் தேர்வான அந்நாட்டின் புதிய அரசு, உலக வங்கி, சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்கள் மூலம் அங்கிருந்த பல பல்கலைக்கழகங்கள் மீண்டும் உயிர்பெற்றன. இதனால் ஆப்கானிஸ்தானின் ஆராய்ச்சி துறை வெகுவாக முன்னேறியது. புற்றுநோய் முதல் புவியியல் மாற்றங்கள் வரை எண்ணற்ற ஆராய்ச்சிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு நாட்டின் அறிவியலும் வளர்ந்தது. 2001-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் ஆட்சி கட்டிலில் இருந்து தலிபான்கள் அகற்றப்பட்ட பிறகு, ஆப்கானிஸ்தானின் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

Also Read:  காபுலை விட்டு கடைசியாக வெளியேறும் முன் அமெரிக்க படையினர் செய்த ராஜதந்திரம் – தாலிபான்கள் அதிர்ச்சி!

ஏராளமான பெண்கள் வேலை செய்ய வீட்டை விட்டு வெளியே வந்தனர். இதனிடையே மீண்டும் தாலிபான்கள் வசம் நாடு சென்றுள்ளதால் ஆப்கானிஸ்தான் அரசிற்கான பில்லியன் கணக்கான டாலர் வெளிநாட்டு நிதி, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வைத்திருக்கும் சொத்துக்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளன. இந்த நிதி எப்போது வெளியிடப்படும், ஒருவேளை நிதி விடுவிக்கப்படாவிட்டால் அது ஆப்கானில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை எவ்வாறு பாதிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால் பல ஆராய்ச்சியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மைய விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றிய காபூல் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தின் நீர் மேலாண்மை நிபுணர் முகமது அசீம் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் இருக்கும் அறிஞர்களின் எதிர்காலம் இனி இருண்டு விடும் என்று கவலை தெரிவித்துள்ளார். தாலிபான்கள் தங்களது முந்தைய ஆட்சியில் செய்தது போல் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கல்வி கற்பிக்கும் இடங்கள் சூறையாடப்படுவதற்கான அதிக சாத்திய கூறுகளும் இருப்பதாக கூறப்படுகிறது. தங்களது எதிர்காலம் இனி மிகவும் நிச்சயமற்றது என்று காபூல் பாலிடெக்னிக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் புவியியலாளர் ஹமீதுல்லா வைசி கூறி இருக்கிறார். தலிபான்கள் பிடியில் ஆப்கானிஸ்தான் சிக்கியுள்ளது அந்நாட்டின் "அறிவியல் மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றத்தில் பெரும் தேக்கம் ஏற்படும்" என்று கணிக்கப்பட்டுள்ளது.
Published by:Arun
First published:

Tags: Afghanistan, Taliban

அடுத்த செய்தி