ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய தலிபான் தீவிரவாதிகள்!

கோப்புப் படம்

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா- தலிபான்கள் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  தங்கள் படைகளை வெளியேற்றும் பணியில் தற்போது அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது

  • Share this:
ஆப்கானிஸ்தானில்  முக்கிய நகரங்களை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில்  தீவிரவாதிகள் மற்றும் அரச படைகளுக்கு இடையே  சுமார் 20 ஆண்டுகளாக   உள் யுத்தம் நடைபெற்று வருகிறது.  அரசு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளும் இந்த உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா விரும்பியது.

இதன் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா- தலிபான்கள் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  தங்கள் படைகளை வெளியேற்றும் பணியில் தற்போது அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் தலிபான்களின் கை ஓங்கியுள்ளது.  அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படாததால், இரு தரப்புக்கும் இடையே அவ்வப்போது  தாக்குதல் நடைபெற்று வருகிறது.  தலிபான் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதிகளில் அரசு படைகள் அண்மையில் வான்வழி தாக்குதல் நடத்தியதில்  33 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியில் தஜிகிஸ்தான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள படாக்ஸ்கான் மற்றும் கந்தகார் மாகாணங்களில் உள்ள நகரங்களை தற்போது தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

அரசு படையைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ராணுவ விரர்கள் தஜிகிஸ்தான் நாட்டுக்கு தப்பியோடியுள்ளனர்.  மொத்தமுள்ள 421 மாவட்டங்களில் அதிகமாக பகுதிகளை தலிபான்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர்.  கடந்த மூன்று நாட்களில்  10 மாவட்டங்கள் தலிபான் வசம் சென்றுள்ளன, இதில்8 மாவட்டங்களை எவ்வித சண்டையும் போடாமலேயே தலிபான் கைப்பற்றியுள்ளது.
Published by:Murugesh M
First published: