ஹோம் /நியூஸ் /உலகம் /

தலிபான்களின் அசுர முன்னேற்றம் - ஒரே வாரத்தில் 8வது ஆப்கன் நகரை கைப்பற்றி மிரட்டல்!

தலிபான்களின் அசுர முன்னேற்றம் - ஒரே வாரத்தில் 8வது ஆப்கன் நகரை கைப்பற்றி மிரட்டல்!

taliban

taliban

ஆப்கானிஸ்தானின் ஃபாரா மற்றும் புல்-இ-கும்ரி நகரங்களை நேற்று (ஆக. 10) ஒரே நாளில் தலிபான்கள் கையகப்படுத்தியுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கு எதிராக போராடி வரும் தலிபான்கள் ஒரே வாரத்தில் 8 முக்கிய நகரங்களை வசப்படுத்தி மிரட்டியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாகவே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் ஷரியா சட்டத்தை நிறுவி ஆட்சியை கைப்பற்றுவதே தலிபான்களின் நோக்கமாகும். 1996 முதல் 2001ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானில் மூன்றில் ஒரு பங்கை கட்டுக்குள் வைத்திருந்தனர் தலிபான்கள், பின்னர் 2001ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரம், பெண்டகன் ராணுவத் தலைமயகம் போன்ற இடங்களின் மீது விமானத் தாக்குதல்களை தீவிரவாதிகள் அரங்கேற்றிய பின்னர் தீவிரவாதிகளை ஒடுக்கும் வகையில் அதிரடியாக செயல்பட்ட அமெரிக்கா தலைமையிலான படைகள் ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஒடுக்கி வைத்திருந்தனர்.

Also Read:  ஆப்கன் அரசுப் படைகளை விட தலிபான்கள் எந்த வகையில் பலம் வாய்ந்தவர்கள்?

20 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் படைகளை முழுமையாக விலக்கிக் கொள்ள முடிவெடுத்துள்ளது அமெரிக்கா. இதனையடுத்து அங்கிருந்து அமெரிக்கா, பிரிட்டன் வீரர்கள் வெளியேறி வருகின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் தலிபான்கள் ஆப்கன் அரசுப் படைகளுக்கு எதிரான தங்களின் சண்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக தலிபான்கள் வேகமாக முன்னேறத் தொடங்கியுள்ளனர்.

talibans

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8 முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் ஆப்கானிஸ்தானின் 34 மாகாண தலைநகரங்களில், 8-ஐ தலிபான்கள் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.

Also Read:  ‘11 நிமிடம் தான் பாலியல் வன்புணர்வு செய்தார்’: குற்றவாளிக்கு தண்டனையை குறைத்து ஷாக் கொடுத்த பெண் நீதிபதி!

ஆப்கானிஸ்தானின் ஃபாரா மற்றும் புல்-இ-கும்ரி நகரங்களை நேற்று (ஆக. 10) ஒரே நாளில் தலிபான்கள் கையகப்படுத்தியுள்ளனர். இது ஃபாரா மாகாணத்தின் தலைநகராகும். அங்கு கவர்னர் இல்லம், போலீஸ் தலைமையகம் போன்ற முக்கிய இடங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

குறிப்பாக ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது. குந்தூஸ், தலுகான், நிம்ருஸ், செபர்கான், சாரஞ், சமங்கன், புல்-இ-கும்ரி, தக்கார் என 8 மாகாணங்களின் தலைநகரங்களை கைப்பற்றியுள்ளனர் தலிபான்கள். இந்த 8 நகரங்களையுமே அவர்கள் ஒரே வாரத்தில் கைப்பற்றியிருப்பது அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. ஆப்கன் அரசுப் படைகள் தலைநகர், விமான நிலையம் மற்றும் ராணுவ தலைமையகத்தை தங்களின் பிடியில் வைத்துள்ளனர்.

Also Read:   குளிக்கும் போது வீடியோ எடுத்து மிரட்டி பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த 81 வயது ரிடையர்ட் பேராசிரியர்!

பாக்லன் மாகாண தலைநகரான புல்-இ-கும்ரி நகரை கைப்பற்றியதன் மூலம் தலைநகர் காபுலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இங்கிருந்து காபுல் 200 கிமீ தொலைவில் தான் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குந்தூஸ், தக்கார் நகரங்களை கைப்பற்றியதன் மூலம் காபுலில் இருந்து வடகிழக்கு மாகாணமாக பதக்‌ஷானுக்கு செல்லும் 378 கிமீ சாலை கிட்டத்தட்ட தலிபான்களின் கட்டுக்குள் வந்திருக்கிறது. இந்த சாலை பயணிகள் மற்றும் வணிக வாகனங்கள் கடந்து செல்லும் முக்கிய சாலையாகும். இதனை போதைப் பொருள் கடத்தலுக்கு தலிபான்கள் பயன்படுத்தி வந்தனர். இன்னும் பல நகர தலைநகரங்களை கைப்பற்றும் நோக்கில் தலிபான்கள் வேகமாக முன்னேறி வருவது ஆப்கன் அரசுப் படைகள் மட்டுமின்றி உலக சமுதாயத்தையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Published by:Arun
First published:

Tags: Afghanistan, Taliban