அமெரிக்க ராணுவத்தின் பயோமெட்ரிக் கருவியை கைப்பற்றிய தாலிபான்கள்: அச்சத்தில் ஆப்கான் வீரர்கள்!

பயோமெட்ரிக்

இந்த கருவியை நீண்ட காலமாகவே அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை பிடிப்பதற்காக அமெரிக்க நடத்திய தேடுதல் வேட்டையின்போது இந்த கருவி பயன்படுத்தப்பட்டது.

  • Share this:
    அமெரிக்க ராணுவத்தின் பயோமெட்ரிக் கருவியை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படும் நிலையில், ஆப்கானிஸ்தானின் முன்னாள் ராணுவ வீரர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தான் நாட்டை முழுவதுமாக கைப்பற்றியுள்ள தாலிபான் அமைப்பினர், மீண்டும் தங்கள் ஆட்சியை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய அரசில் பெண்களும் இடம்பெற வேண்டும் என்று தாலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பழிவாங்கல் நடவடிக்கை இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனிடையே,  ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் பயன்படுத்திய பயோமெட்ரிக் கருவிகளை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: பெண்கள் உரிமை பற்றிய கேள்விக்கு சிரிப்பில் ஆழ்ந்த தாலிபான்கள்- வைரல் வீடியோ


    கையடக்க ஒருங்கிணைப்பு அடையாளம் கண்டறிதல் உபகரணங்கள் (HIIDE) என்று அழைக்கப்படும் இந்த கருவியில் விழி ரேகை, கை ரேகை, அங்க அடையாளங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் ஆகியோரை கண்டறிய இந்த கருவிகள் பயன்படுவதாக கூறப்படும் அதேவேளையில், அமெரிக்க ராணுவத்துக்கு உதவியாக இருந்த ஆப்கானிஸ்தான் நபர்களின் விவரங்களும் இந்த கருவியில் இடம்பெற்றுள்ளன.  அமெரிக்க ராணுவத்துடனான கூட்டு முயற்சியில் ஈடுபட்ட உள்ளூர் மக்களின் தகவல்கள் இதில் சேகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் படிங்க: அரசாங்கத்தில் சேருங்கள்: பெண்களுக்கு தாலிபான்கள் அழைப்பு!


    இது தொடர்பாக இண்டர்செப்ட் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், பயோமெட்ரிக் கருவியை இயக்க தாலிபான்களுக்கு கூடுதல் கருவிகள் தேவைப்படும் எனினும் பாகிஸ்தான் அதனை வழங்கக்கூடும் என முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது.

    இந்த கருவியை நீண்ட காலமாகவே அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை பிடிப்பதற்காக அமெரிக்க நடத்திய தேடுதல் வேட்டையின்போது இந்த கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தாலிபான்கள் கையில் இந்த கருவி சிக்கியுள்ளதால் அமெரிக்காவுக்கு ஆதரவாக பணியாற்றிய ஆப்கானிஸ்தான்வாசிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
    Published by:Murugesh M
    First published: