முகப்பு /செய்தி /உலகம் / பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடியே திரையில் வர வேண்டும் - தாலிபான் உத்தரவு

பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடியே திரையில் வர வேண்டும் - தாலிபான் உத்தரவு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தாலிபான் அரசின் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும், இல்லை என்றால் வேலை கிடையாது வேறு வேலை பார்த்துக்கொள்ளுங்கள் என டோலோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு பெண்களுக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதன்படி, ஆப்கானிஸ்தான் செய்தி சேனல்களில் பணி புரியும் பெண் செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் இனி பர்தாவால் முடப்பட்ட முகத்துடன் திரையில் வர வேண்டும் என தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ஏற்று தற்போது ஆப்கானிஸ்தான் செய்தி சேனல்களில் திரையில் தோன்றும் பெண்கள் முகங்களை மூடிக்கொண்டே செய்தி வாசிப்பிலும், தொகுத்து வழங்குவதிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

உடல் முழுவதும் ஹிஜாப்பால் மூடி, முகத்திலும் கண்களை தவிர அனைத்து பாகங்களும் மூடிய வகையில், பெண் செய்தி வாசிப்பாளர்கள் காலை செய்திகளை வாசித்தனர். தாலிபானின் இந்த உத்தரவை பின்பற்ற முடியாது என அங்குள்ள டோலோ செய்தி சேனலின் தொகுப்பாளர் சோனியா நியாசி மறுப்பு தெரிவித்துள்ளார்.

தாலிபான் அரசின் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும், இல்லை என்றால் வேலை கிடையாது வேறு வேலை பார்த்துக்கொள்ளுங்கள் என டோலோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வேறு வழியின்றி பெண் செய்தி வாசிப்பாளர்கள் உத்தரவை பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.

1996 முதல் 2001ஆம் ஆண்டு வரையிலான தாலிபான் ஆட்சி காலத்திலேயே பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அடக்குமுறைக்கு ஆளானார்கள். இந்த காலகட்டத்தில், அனைத்து பெண்களும் நீல நிற பர்தா அணிய வேண்டும் என தாலிபான் அரசு உத்தரவிட்டது. பின்னர், அமெரிக்காவின் படையெடுப்பு காரணமாக 2001ஆம் ஆண்டு தாலிபான் ஆட்சி வீழ்த்தப்பட்டு, அமெரிக்க வழிகாட்டுதல் படி ஜனநாயக அரசு நிறுவப்பட்டது. இந்த காலகட்டத்தில் பெண்கள் மீண்டும் பணிகளில் அதிகம் ஈடுபடத் தொடங்கினர். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க படை ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பியதை அடுத்து, அங்கு தாலிபான் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

இதையும் படிங்க: பெட்ரோல் டீசல் விலையை குறைத்த இந்திய அரசுக்கு பாகிஸ்தான் இம்ரான் கான் பாராட்டு - ஏன் தெரியுமா?

இதைத் தொடர்ந்து அங்கு பெண்களுக்கு மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகிறது. 13 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கல்விக் கூடங்கள் செல்ல தடை, பொதுவெளிகளில் பர்தா கட்டாயம், பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் கெடுபிடி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் கடந்த சில மாதங்களாக ஆப்கானிஸ்தானில்அமலபடுத்தப்பட்டுள்ளது.

First published:

Tags: Afghanistan, Taliban