ஹோம் /நியூஸ் /உலகம் /

தலிபான் நிறுவனர் புதைக்கப்பட்ட இடம்…9 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிப்பட்ட ரகசியம்

தலிபான் நிறுவனர் புதைக்கப்பட்ட இடம்…9 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிப்பட்ட ரகசியம்

தலிபான் நிறுவனர் புதைக்கப்பட்ட இடம்

தலிபான் நிறுவனர் புதைக்கப்பட்ட இடம்

தலிபான் இயக்கத்தை தொடங்கிய முல்லா ஒமர் புதைகப்பட்ட இடம் எது என்கிற ரகசியம் 9 ஆண்டுகள் கழித்து இப்போது வெளியாகியுள்ளது. அந்த ரகசியதிதை தலிபான்களே வெளியிட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு மேல் குண்டு சத்தமும், மரண ஓலமும் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது. அண்மைக்காலமாக ஆப்கானிஸ்தான் அரசின் பெரும் தொல்லையாக இருந்து வந்தது தலிபான்கள் அமைப்பு. தலிபான்களின் அட்டகாசத்தால் அமெரிக்கப்படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தது. கிட்டத்தட்ட அமெரிக்கப்படைகளின் ஆதரவில் அந்நாட்டில் 20 ஆண்டுகளாக ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த ஆண்டு அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும்  என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். இதையடுத்து 20 ஆண்டுகள் கழித்து அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியயேறின.

  அமெரிக்கப் படைகள் வெளியேறியவுடன் மீண்டும் தலிபான்கள் ஆட்சியைப்பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். அஷரப் கனியின் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் தலிபான்கள் கிளர்ச்சியில் ஈடுபடத் தொடங்கினர். இதையடுத்து அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு வெளியேறினார். கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர். தலிபான்களின் அரசை உலகின் பெரும்பாலான நாடுகள் அங்கீகரிக்கவில்லை என்றாலும், பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே அவர்களின் ஆட்சி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

  இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு உயிரிழந்த தலிபான் இயக்க நிறுவனரான முல்லா ஒமர் புதைக்கப்பட்ட இடத்தை தலிபான்கள் வெளியிட்டுள்ளனர். ஜாபூல் மாகாணத்தில் சூரி மாவட்டத்தில் ஒமார்சா என்னும் இடத்தில் முல்லா ஒமரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தலிபான்கள் அரசு அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தலிபான்களின் முன்னணி தலைவர்கள் அந்த இடத்தில் கூடி முல்லா ஒமருக்கு அஞ்சலி செலுத்தியதாக தலிபான்களின் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாகிஹித் தெரிவித்துள்ளார்.

  Also Read : மொத்தம் ரூ.100 மில்லியன்.. போலீசாரின் வங்கிக் கணக்கில் கொட்டிய பண மழை..!

  மேலும், ஆப்கனைச் சுற்றி ஏராளமான எதிரிகள் இருந்ததால் தங்ளது நிறுவனர் புதைகப்பட்ட இடம் தெரிந்தால் எதிரிகளால் நினைவிடம் சிதைக்கப்படும் என்கிற அச்சத்தால் ஒமர் புதைக்கப்பட்ட இடத்தை இதுவரை ரகசியமாக வைத்திருந்ததாகவும் சபியுல்லா தெரிவித்துள்ளார்.  தற்போது தங்களுடைய ஆட்சி நடைபெறுவதால் எந்த பிரச்னையும் இல்லை என்றும், முல்லா ஒமரின் நினைவிடத்தை பொதுமக்கள் தாரளமாக தற்போது பார்வையிடலாம் என்றும் சபியுல்லா தெரிவித்துள்ளார்.

  முல்லா ஒமரின் தலைமையில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்ற போது ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக பல்வேறு ஒடுக்குமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. பொது வாழ்க்கையில்  இருந்து பெண்கள் முற்றிலும் ஒதுக்கிவைக்கப்பட்டனர். குற்றங்களுக்கு மிகக்கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. இஸ்லாமியச் சட்டப்படி மிக கடுமையான நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டன. தற்போது ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ள தலிபான்கள் மீதம் இதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

  Published by:Vijay R
  First published:

  Tags: Afghanistan, Taliban