ஹோம் /நியூஸ் /உலகம் /

மகளிர்நல அமைச்சகத்தையே கலைத்த தாலிபான்கள் - அட்ராசிட்டி ஆரம்பம்!

மகளிர்நல அமைச்சகத்தையே கலைத்த தாலிபான்கள் - அட்ராசிட்டி ஆரம்பம்!

talibans

talibans

1996 முதல் 2001 வரை தாலிபான்கள் ஆட்சியில் இருந்த போதே இந்த அமைச்சகம் செயல்பாட்டில் இருந்தது. பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகவே இந்த அமைச்சகம் செயல்பாட்டில் இருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஆப்கானிஸ்தானில் மகளிர் நலத்துறை அமைச்சகத்தை கலைத்துள்ள தாலிபான்கள் அதற்கு பதிலாக பிரார்த்தனை, வழிகாட்டுதல், நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் என அந்த அமைச்சகத்துக்கு புதிய பெயர் சூட்டியுள்ளனர்.

தாலிபான்கள் ஆப்கனை கைப்பற்றி ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் கட்ந்த செப்டம்பர் 7ம் தேதி இடைக்கால அரசை நிறுவியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசை அமைப்போம் என்பதே தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை பிடித்த பின்னர் அளித்த வாக்குறுதியாகும்.

ஆனால் சொல்ல சொல்லை காப்பாற்றாத தாலிபான்கள் தற்போது பெண்களுக்கு எதிராக சாட்டை சுழற்ற தொடங்கியுள்ளனர். முதலில் பெண்கள் வேலை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள், அவர்களுக்கு கல்வி உரிமை வழங்கப்படும், மற்றும் பெண்களுக்கு உரிய பிற உரிமைகள் காக்கப்படும் என்றெல்லாம் பேசிய தாலிபான்கள் தற்போது மகளிர்நலத்துறை அமைச்சகத்தையே கலைத்துள்ளனர்.

பிரார்த்தனை, வழிகாட்டுதல், நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் அமைச்சகம் என மகளிர்நலத்துறை அமைச்சகத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிய அமைச்சகம் கிடையாது, கடந்த 1996 முதல் 2001 வரை தாலிபான்கள் ஆட்சியில் இருந்த போதே இந்த அமைச்சகம் செயல்பாட்டில் இருந்தது. பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகவே இந்த அமைச்சகம் செயல்பாட்டில் இருக்கிறது.

Also read:   கேரளாவில் கல்லூரிகளில் இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு இழுக்க முயற்சி – ஆளும் கட்சி பகீர் தகவல்

முன்னர் ஆப்கன் பெண்கள் மற்றும் சிறுமிகள் இத்துறையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். இத்துறையினரால் பொது இடங்களில் பெண்கள் அடிக்கப்படுவார்கள், சாலைகளில் சுற்றித்திரியும் அலுவலர்கள், உறவினர்களுடன் செல்லாமல் தனியாக செல்லும் பெண்களை பார்த்தால் அடிப்பார்கள், மேலும் சரியாக உடை உடுத்தாதவர்கள், கை மணிக்கட்டு, கால் தெரிந்தாலும் அடி தான், இசை கேட்பவர்களும் தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள்.

இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதே இத்துறையின் நோக்கமாகும். முன்னர் தாலிபான்கள் 2001ல் ஆட்சியை விட்டு அகற்றிய போது இத்துறை கலைக்கப்பட்டது, தற்போது மீண்டும் தாலிபான்கள் வசம் ஆட்சி அதிகாரம் சென்றிருப்பதால் இத்துறை புத்துணர்ச்சியுடன் செயல்பாட்டுக்கு திரும்பியிருக்கிறது.

Also read:  திருவிழாவுக்கு சென்றுவிட்டு தாயுடன் நடந்து சென்ற 19வயது பெண்ணை நாசம் செய்த கும்பல்

பெண்கள் பள்ளி - கல்லூரி செல்ல தடை:

கடந்த வெள்ளியன்று தாலிபான்கள் வெளியிட்ட அறிவிப்பின்படி, 6 மற்றும் அதற்கு மேல் உள்ள வகுப்புகளின் ஆண் மாணவர்கள் மற்றும் ஆண் ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். முன்னதாக ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரையிலான மாணவிகளை பள்ளி செல்ல தாலிபான்கள் அனுமதி வழங்கிய நிலையில் தற்போது திடீரென மறுத்துள்ளனர். மேலும் பல மாகாணங்களில் பெண்களை வேலைக்கு செல்லவும் தாலிபான்கள் அனுமதிக்கவில்லை. தாங்கள் மட்டுமே குடும்பத்திற்காக உழைக்கும் ஒரே நபர் என எடுத்துரைத்த போதிலும் கூட பெண்கள் பணிபுரிய மறுக்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தாலிபான்களில் நடவடிக்கைகள் காரணமாக ஆப்கன் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Arun
First published:

Tags: Afghanistan, News On Instagram, Taliban, Women