தேசிய புலனாய்வு அமைப்பால் தேடப்படுபவர்கள் என அறிவிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 8 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உள்ளிட்ட 24 இந்தியர்களை தாலிபான்கள் விடுவித்தனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், நாட்டின் பெயரை 20 ஆண்டுகளுக்கு முன்பு அழைக்கப்பட்டது போன்று ”ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்” என மாற்றியுள்ளனர். நாட்டின் புதிய அதிபராக முல்லா அப்துல் கனி பராதர் அறிவிக்கப்பட்டுள்ளார். காபூலில் உள்ள பெரும்பாலான சோதனைச் சாவடிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட அரசு கட்டிடங்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் தாலிபான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆப்கானை கைப்பற்றிய பின்னர் புல்-இ-சர்கி மற்றும் பதம் பாக் ஆகிய இரண்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த அனைத்து கைதிகளையும் தாலிபான்கள் விடுதலை செய்துள்ளனர். அதில் கேரளாவைச் சேர்ந்த 8 பெண்கள் உள்ளிட்ட 24 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: இந்திய அதிகாரிகள் 130 பேருடன் ஐ.ஏ.எஃப். விமானம் காபூலில் இருந்து இந்தியா புறப்பட்டது!
இந்த 8 பேரும் கடந்த 2016 ஆம் ஆண்டு ஐஎஸ் அமைப்பில் சேர நங்கார் பகுதிக்கு சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் காபூல் குருத்வாராவில் நடைபெற்ற தாக்குதலில் 27 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதலுக்கு காரணமான தேடப்பட்டு வந்த தீவிரவாதியான அய்ஜாஸ் அகங்காரும், தாலிபனால் விடுவிக்கப்பட்டுள்ளான். அய்ஜாஸை விசாரிக்க NIA அமைப்பினர் கடந்த ஆண்டு ஆப்கான் செல்லவிருந்த நிலையில், கொரோனா காரணமாக அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: என்ன ஆச்சர்யம்! நாடு முழுவதும், பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒருமாதமாக எந்த மாற்றமும் இன்றி விற்பனை...
விடுவிக்கப்பட இவர்கள் மற்ற நாடுகள் வழியே இந்தியாவிற்குள் நுழையலாம் என எதிர்பார்க்கபடுவதால், கண்காணிப்பை தீவிரப்படுத்த தேசிய புலனாய்வு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.