விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த ஆப்கன் பெண்களின் பட்டியலை தயார் செய்து வரும் தாலிபான்கள் அவர்களுக்கு என்ன விதமான தண்டனை கொடுக்கப்போகிறார்கள் என பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் தாலிபான்கள் அடுத்த ஆட்சி அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான பேச்சுவார்த்தை காரசாரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெண்கள் விஷயத்தில் கெடுபிடியாக நடந்து கொள்ளும் தாலிபான்கள் அவர்களுக்கு உரிய சுதந்திரத்தை கொடுக்காமல் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். ஆப்கனில் பெண்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியிருப்பதாக பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தங்களை வேலைக்கு செல்ல அனுமதி வேண்டும் என சில பெண்கள் தைரியமாக சாலையில் வந்து போராடியிருக்கும் நிலையில் பெண்களுக்கு தாலிபான் ஆட்சி அதிகாரத்தில் பிரநிதித்துவம் கிடையாது என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த ஆப்கானிஸ்தான் பெண்கள் யார் யார் என கண்டறியும் பணியில் தாலிபான்கள் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காகவே விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்களின் பட்டியல் தயாரிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Also Read:
சட்டமன்றத்தில் பிரிட்டிஷார் காலத்திய ரகசிய சுரங்கம் கண்டுபிடிப்பு..
விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் எனவும் அதற்காக தான் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது, முந்தைய (1996-2001) தாலிபான்கள் ஆட்சியில் விபச்சாரம் அல்லது குடும்ப உறவுகளுக்கு மாறான உறவு வைத்துக் கொள்ளும் பெண்களுக்கு பொது இடத்தில் வைத்து தாலிபான்கள் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளனர். இத்துடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களை அடையாளம் கண்டு அவர்களை செக்ஸ் அடிமைகளாகவும் தாலிபான்கள் வைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Also Read:
காஷ்மீர் விவகாரத்தில் அந்தர் திடீர் பல்டி அடித்த தாலிபான்கள்!
ஆன்லைனில் ஆபாச இணைய தளங்களை பார்த்து அதில் ஆப்கானிஸ்தான் பெண்களை அடையாளம் காணும் பணியில் தாலிபான்கள் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் இது போன்ற பெண்கள் விஷயத்தில் தண்டனை விதிக்கப்படலாம் என சொல்லப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான சாட்டையை தாலிபான்கள் கையில் எடுத்திருப்பதால் பெண்களிடையே அச்சமும் ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.