ஆப்கானிஸ்தான் இஸ்லாமிக் அமீரகம் என்று அறிவிப்போம் - தாலிபான்கள்

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் இஸ்லாமிக் அமீரகம் என்று என்று பிரகடனப்படுத்துவோம் என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  அமெரிக்க படைகள் வெளியேற்றத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாகவே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருக்கிறது. ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. தலிபான்களை சமாளிக்க முடியாமல் அரசு படைகள் திணறி வருகின்றன. தலிபான்களோ முக்கிய நகரங்களை கைப்பற்றி முன்னேறி வருகின்றனர். தலிபான்கள் வசம் ஆப்கானின் பெரும்பகுதி சென்றுவிட்ட நிலையில், இதில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது பெண்கள்தான்.

  தாலிபான்கள் மிக விரைவாக ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினர். ந்தூஸ், தலுகான், நிம்ருஸ், செபர்கான், சாரஞ், சமங்கன், புல்-இ-கும்ரி, தக்கார் உட்பட 10 மாகாணங்களின் தலைநகரங்களை கைப்பற்றிய தலிபான் அமைப்பினர் அதனை தொடர்ந்து கந்தகாரை கைப்பற்றியது. இன்று ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலையும் தாலிபான்கள் கைப்பற்றினர். அதன்மூலம், ஆப்கானிஸ்தான், தாலிபான்களின் கட்டுக்குள் அதிகாரப்பூர்வமாக செல்வது உறுதியானது. சுமார், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.

  ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலை தலிபான் அமைப்பினர் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் அதிபர் பதவியை ராஜினாமா செய்த அஷ்ரப் கானி தஜிகிஸ்தானுக்கு தப்பியோடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், அவர் எங்கு சென்றுள்ளார் என்பது தெரியவில்லை. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் உலக நாடுகள் பலவும் காபூலில் இருந்த தங்களது தூதரகத்தை மூடியுள்ளனர். ஆப்கானிஸ்தானிலுள்ள தங்கள் நாட்டு பிரதிநிதிகளை நாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்தியாவின் ஏர் இந்தியா விமானம் 120-க்கும் மேற்பட்ட இந்தியர்களை காபூலிலிருந்து இன்று அழைத்து வந்தது. காபூலில் உள்ள சர்வதேச விமானம் தொடர்ந்து செயல்படுவதை நேட்டோ படையினர் உறுதி செய்கின்றனர். அதன்மூலம், மக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதை உறுதி செய்கிறது. ஓரிரு தினங்களில் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தாலிபான்கள் கையில் எடுப்பார்கள் என்று தெரிகிறது. ஆப்கானிஸ்தான் இஸ்லாமிக் அமீரகம் என்று என்று பிரகடனப்படுத்துவோம் என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
  Published by:Karthick S
  First published: