ஹோம் /நியூஸ் /உலகம் /

பொது இடத்தில் பெண்கள் முழு புர்கா அணிவது கட்டாயம் - தாலிபான் உத்தரவு

பொது இடத்தில் பெண்கள் முழு புர்கா அணிவது கட்டாயம் - தாலிபான் உத்தரவு

பொது இடத்தில் பெண்கள் முழு புர்கா அணிவது கட்டாயம் - தாலிபான் உத்தரவு

பொது இடத்தில் பெண்கள் முழு புர்கா அணிவது கட்டாயம் - தாலிபான் உத்தரவு

Taliban - பொதுவெளியில் வரும் பெண்கள் கண்களைத் தவிர அனைத்து பாகங்களையும் மறைக்கும் விதமாக புர்கா அணிய வேண்டும் என தாலிபான் உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு பெண்களுக்கு பெண்களுக்கு கடுமையான ஆடை கட்டுப்பாட்டை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இனி ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் பொது வெளியில் உடலை முழுமையாக மறைக்கும் விதமான புர்காவை அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆப்கானிஸ்தானின் உச்ச தலைவரான ஹிபாதுல்லா அகுன்ட்ஸ்சடா கூறியதாவது, பெண்கள் அனைவரும் தலை முதல் பாதம் வரை மறைக்கும் புர்காவை அணிய வேண்டும். அதுவே, மரியாதையும் பாரம்பரியமும். ஷரியா சட்டத்தின் படி, முதுமை அடையாத பெண்கள் அனைவரும் கண்களைத் தவிர அனைத்து பாகங்களை மறைக்கும் விதமாக புர்கா அணிய வேண்டும். இதன் மூலம் ஆண்களின் அத்துமீறலில் இருந்து அவர்கள் தவிர்க்கப்படுவார்கள். முக்கியமான வேலை ஏதும் இல்லை என்றால் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பது நலம் என்றார்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அமெரிக்க படைகள் முற்றாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது. இதையடுத்து, அங்கிருந்த ஜனநாயக ஆட்சி கவிழ்ந்து தாலிபான் ஆட்சி அமலுக்கு வந்தது. தாலிபான் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் என அன்றே சர்வதேச சமூகம் அச்சப்பட்டது. பாலின சமத்துவத்திற்கு எதிராக நடவடிக்கைகள் பலவற்றை கடந்த ஓராண்டில் தாலிபான் மெல்ல மெல்ல மேற்கொண்டுவருகிறது.

அந்நாட்டில் தற்போது ஆறாம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்க தடை என தாலிபான் அரசு உத்தரவிட்டது. இதற்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டம் தெரிவித்தனர். அத்துடன் பெண்களுக்கு வாகன ஓட்ட உரிமம் வழங்கப்படவில்லை எனவும் செய்திகள் வெளியாகின. அத்துடன் பூங்கக்களுக்கு பெண்களும் ஆண்களும் ஒன்றாக செல்ல அனுமதி இல்லை எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தன்னை கழுதையுடன் ஒப்பிட்டு நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளான இம்ரான் கான், ஆரம்பத்தில் தாலிபானின் இந்த உத்தரவுகளுக்கு எதிராக சில பெண்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தினர். ஆனால், தாலிபான் தங்களின் அதிகாரத்தின் மூலம் அவர்களின் குரல்களை முடக்கி தனது உத்தரவுகளை அமல்படுத்தி வருகின்றன.

First published:

Tags: Taliban