ஹோம் /நியூஸ் /உலகம் /

ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை.. தாலிபான் அதிரடி உத்தரவு

ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை.. தாலிபான் அதிரடி உத்தரவு

பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற தடை

பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற தடை

ஆப்கானிஸ்தானில் இனி பெண்கள் அனைவரும் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறக்கூடாது என்ற புதிய உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, Indiakabulkabul

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி அமைந்ததில் இருந்தே பெண் உரிமைகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தாலிபான் மற்றொரு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இனி அந்நாட்டில் பெண்கள் அனைவரும் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறக்கூடாது என தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக அந்நாட்டின் பால்க் மாகாணத்தில் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. மாகாணத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் பெண்கள் ஆண் மருத்துவர்களை பார்த்து சிகிச்சை பெற அனுமதி இல்லை. பெண் மருத்துவர்களிடம் மட்டுமே பெண்கள் சிகிச்சை பெற வேண்டும். இதை அனைத்து மருத்துவமனைகளும் உறுதி செய்ய வேண்டும் என தாலிபான் அரசின் பொது விவகாரங்கள் மற்றும் புகார்களைக் கேட்கும் இயக்குநரகம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

இந்த புதிய உத்தரவால் சர்வதேச சமூகம் மீண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தாலிபான் ஆட்சியைப் பிடித்ததில் இருந்தே அங்குள்ள  பெண்களின் சுதந்திரம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக முடக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் பெண்களின் உரிமைகளை பாதுகாப்போம் என்று தாலிபான் கூறிய நிலையில், அதற்கு தலைகீழாக நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: ஒரே மாதத்தில் 20 விஞ்ஞானிகள் மர்ம மரணம்... சீனாவில் தொடரும் பரபரப்பு

பெண்கள் கல்வி கற்க தடை,பெண்கள் கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓட்ட தடை, பூங்கா மற்றும் கேளிக்கை பகுதிகளுக்கு செல்ல தடை, ஹிஜாப் இல்லாமல் பொதுவெளியில் வர தடை என பல்வேறு தடைகள் தாலிபான்கள் பெண்கள் மீது திணித்து வருகின்றன. ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் கண்டனக் குரல்களையும் மீறி தாலிபான் அரசு இதுபோன்ற உத்தரவுகளை தொடர்ந்து பிறப்பித்து வருகிறது.

First published:

Tags: Afghanistan, Doctor, Taliban, Tamil News, Women