ஹோம் /நியூஸ் /உலகம் /

வேடிக்கை பார்க்க அழைப்பு.. பார்வையாளர்கள் முன்னிலையில் பெண்களுக்கு கசை அடி வழங்கிய தாலிபான்

வேடிக்கை பார்க்க அழைப்பு.. பார்வையாளர்கள் முன்னிலையில் பெண்களுக்கு கசை அடி வழங்கிய தாலிபான்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தாலிபான்கள் 14 பேரை பொதுவெளியில் வைத்து கசையால் அடித்து தண்டனை தந்த பரபரப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, Indiakabulkabulkabul

  2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க படைகள் முற்றாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது. இதையடுத்து, அங்கிருந்த ஜனநாயக ஆட்சி கவிழ்ந்து தாலிபான் ஆட்சி அமலுக்கு வந்தது.இந்த ஆட்சி மாற்றத்திற்குப் பின் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து மனித உரிமை மீறல் தொடர்பான புகார்கள் எழுந்து வருகின்றன. பாலின சமத்துவத்திற்கு எதிராக நடவடிக்கைகள் பலவற்றை கடந்த ஓராண்டில் தாலிபான் மெல்ல மெல்ல மேற்கொண்டுவருகிறது.மேலும், இஸ்லாமிய ஷரியத் சட்ட விதிகளின் கீழ் கடுமையான கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்துள்ளனர்.

  இந்நிலையில், அந்நாட்டின் லோகர் மாகாணத்தில் தாலிபான்கள் 14 பேரை பொதுவெளியில் வைத்து கசையால் அடித்து தண்டனை தந்த பரபரப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த 14 பேரில் 11 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள். இவர்கள் திருட்டு மற்றும் ஒழுக்கம் சார்ந்த குற்றங்களில் ஈடுபட்டதாக தாலிபான் பிடித்து வைத்துள்ளது.லோகர் மாகாணத்தில் உள்ள பால் ஆலம் என்ற பகுதியில் உள்ள மைதானத்தில் 100க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் இந்த கசை அடி தண்டனை நிறைவேற்றப்பட்டது.இதற்காக நாள் குறித்து தண்டனை நிறைவேற்றும் நிகழ்வை காண வாருங்கள் என அப்பகுதி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் தாலிபான்கள்.

  இதையும் படிங்க: சவுதியில் 10 நாள்களில் 17 பேருக்கு மரண தண்டனை.. கவலை தெரிவித்துள்ள ஐநா மனித உரிமை அமைப்பு!

  அதன்படி, தண்டனைக்கு ஆளான 14 பேருக்கும் 21 முதல் 39 கசையடி பொது வெளியில் வைத்து வழங்கப்பட்டது. அதேவேளை, அங்கு குழுமிய பார்வையாளர்கள் இதை புகைப்படமோ, வீடியோவோ எடுக்க தடை விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. அதேவேளை, இந்த மாதத்திற்குள் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை முழுமையாக கறாராக அமல்படுத்த வேண்டும் என அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் ஹிபாத்துல்லா அகுன்சதா உத்தரவிட்டுள்ளார். எனவே, அங்கு இது போன்ற கடுமையான கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Afghanistan, Taliban