Home /News /international /

காபூலில் ஜாலியாக சுற்றி திரியும் தாலிபான்கள் - வைரலாகும் வீடியோக்கள்!

காபூலில் ஜாலியாக சுற்றி திரியும் தாலிபான்கள் - வைரலாகும் வீடியோக்கள்!

talibans

talibans

இணையத்தில் வைரலாகும் வீடியோவில், ரயில்வே தண்டவாளங்கள், சில தெருக்களில் தாலிபான்கள் நடமாடிய காட்சிகள் இருந்தது.

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை தாலிபான் தீவிரவாத அமைப்பினர் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு பணியாற்றிய அமெரிக்கர்கள் மற்றும் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்காவின் ராணுவ படைகளும் திரும்ப பெறப்பட்டுள்ளது. சமீபத்தில், ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இணையத்தில் வைரலாகும் வீடியோவில், ரயில்வே தண்டவாளங்கள், சில தெருக்களில் தாலிபான்கள் நடமாடிய காட்சிகள் இருந்தது.

தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பெண்களின் நிலை குறித்த அச்சங்கள் எழுந்துள்ள நிலையில் நாங்கள் பொதுமக்களை எதுவும் செய்ய மாட்டோம், அனைவரும் பயப்படாமல் இருக்கலாம் என தாலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆனால் அங்குள்ள அழகு நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள பெண்களின் புகைப்படங்களை பெயிண்ட் கொண்டு அழிக்கும் பணிகளில் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர்.

Also Read: ஓலா S1 pro Vs ஏதெர் 450X: எது சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்? – ஒரு முழுமையான ஒப்பீடு..

மேலும் நாங்கள் உங்களை பாதுகாப்பதற்காக தான் வந்திருக்கிறோம் என கூறி பொதுமக்களிடம் இருக்கும் ஆயுதங்களை வீடு வீடாக சென்று கைப்பற்றினர். இதனால் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் பொதுமக்கள் பதற்றத்துடன் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அரசு அதிகாரிகள் பணிக்கு திரும்ப தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

யார் இந்த தாலிபான்கள், ஏன் இப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி உலகம் முழுவதும் எழுந்துள்ள நிலையில், மிகவும் சாதாரணமாக  தாலிபான்கள் ஜாலியாக சுற்றி வருகின்றனர். பொழுதுபோக்கு பூங்காக்களில் சவாரி செய்வது, குதிரை மற்றும் மின்சார பம்பர் கார்களில் சவாரி செய்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read: பெண்ணின் ஆடைகளை கிழித்து, அந்தரத்தில் தூக்கிப் போட்டு அட்டகாசம் – பாகிஸ்தான் சுதந்திர தினத்தன்று பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

காபூலைச் சேர்ந்த ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர் ஹமீத் ஷாலிசி, அவரது ட்விட்டரில் இந்த வீடியோக்களை ஷேர் செய்துள்ளார். அதில் தாலிபான் போராளிகள் சிலர் தங்கள் கையில் ஆயுதங்களுடன் சுற்றி வருகின்றனர். மேலும் ஜிம்களிலும் உடற்பயிற்சி செய்து கொண்டே மகிழ்ச்சியுடன் சுற்றி திரியும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

மேலும் ஒரு வீடியோவில் தாலிபான் உறுப்பினர்கள், ஜெனரல் தோஸ்தம் உள்ளிட்டோர் ஒரு வீட்டினுள் குழுக்களாக நின்று சாப்பிடுவதை காட்டுகிறது. மேலும் தாலிபான் தீவிரவாதிகள் "சாதாரண போக்குவரத்து மீறல்களுக்காக" மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Also Read: ஆயுதங்களுடன் வாசலில் நின்ற தாலிபான்கள்.. பதைபதைப்பில் இருந்த இந்தியர்கள் – திக் திக் நிமிடங்கள்

இதனிடையே இன்று ஒரு வீடியோ வெளியாகியுள்ளது . அதில், ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலை குறித்து உலகளாவிய கவலைக்கு மத்தியில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் பெண்கள் சுதந்திரம் குறித்து தலிபான்களிடம் கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு பதில் அளித்த தலிபான் தீவிரவாதி ஒருவர் இஸ்லாமிய சட்டத்தில் உள்ள விஷயங்கள் அனுமதிக்கப்படும் என்கிறார். பின்னர் அந்த பெண், பெண்களுக்கு அரசியலில் அனுமதி வழங்கப்படுமா? என கேள்வி எழுப்ப அதற்கு கிண்டலாக சிரிக்கும் தீவிரவாதி வீடியோவை நிறுத்த சொல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்னதாக தங்கள் ஆட்சியில் பெண்கள் உரிமை பாதுகாக்கப்படும், பெண்களுக்கு எதிரான அடக்கு முறையில் ஈடுபடமாட்டோம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஷரியத் சட்டப்படி உரிமைகள் வழங்கப்படும் என தலிபான்கள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published:

Tags: Afghanistan, News On Instagram, Taliban, Viral Video

அடுத்த செய்தி