தலிபான்களிடம் இன்றே வீழ்கிறதா காபுல்?: எல்லையை மூடியது பாகிஸ்தான் - ஆப்கனில் பதற்றம் அதிகரிப்பு!

taliban

அமெரிக்க ஹெலிகாப்டர்கள் காபுலில் உள்ள தூதரகத்தில் இறங்குவதும், ஏறுவதுமாக இருக்கின்றன.

  • Share this:
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் தலிபான்கள் நுழைந்துள்ளதாக ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் காபுல் நகரம் எங்கள் கண்ட்ரோலில் வரும் என தலிபான்கள் அறிவிப்பு வெளியிட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாகவே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. 20 ஆண்டுகளாக அரசுப் படைகளுக்கு அமெரிக்க படைகள் ஆதரவாக இருந்து வந்த நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டு படைகளை வெளியேற அமெரிக்க அரசு உத்தரவிட்டது. இன்னும் சில நாட்களில் மிச்சமிருக்கும் அமெரிக்க படைகளும் முழுமையாக வெளியேற இருக்கும் நிலையில் நிலைமையை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தலிபான்கள் அங்கு சண்டையை தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.

இதன் காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் வியக்கத்தக்க முன்னேற்றத்தை தலிபான்கள் எட்டியிருக்கின்றனர். மொத்தம் உள்ள 34 மாகாண தலைநகரங்களில் 26ஐ தலிபான்கள் கைப்பற்றியிருக்கின்றன. எஞ்சியிருக்கும் நகரங்களில் தலைநகர் காபுல் மட்டுமே முக்கியம் வாய்ந்த நகராக இருக்கிறது. ஆனால் அங்கும் தலிபான்கள் தற்போது கால்பதித்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Also Read: பெற்றோர்களே உஷார்: கொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இப்படி ஒரு ஆபத்தா?

தலிபான்கள் காபுல் நகருக்குள் ஊடுருவியுள்ளதாக ஆப்கன் அதிகாரிகள் ஏஃஎப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கின்றனர். இதனிடையே காபுலில் உள்ள தூதரக அதிகாரிகளை மீட்பதற்காக 3000 பேர் அடங்கிய படையை ஆப்கனுக்கு அனுப்பி வைத்திருந்தது அமெரிக்கா. அமெரிக்க ஹெலிகாப்டர்கள் காபுலில் உள்ள தூதரகத்தில் இறங்குவதும், ஏறுவதுமாக இருக்கின்றன.

இதனிடைடே ஆப்கானிஸ்தானுடனான எல்லையை பாகிஸ்தான் அடைத்திருக்கிறது. தங்கள் நாட்டுக்குள் ஆப்கன் மக்கள் தஞ்சமடைவதை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கையாக அது பார்க்கப்படுகிறது. ஆப்கன் படைகளுக்கு கடும் நெருக்கடியும் பாதுகாப்பற்ற தன்மையும் ஏற்பட்டிருக்கிறது. ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி அமெரிக்காவிற்கு செல்லவிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. தலிபான்கள் தற்போது காபுலின் எல்லையில் குவிக்கப்பட்டு வருவதாகவும் அடுத்தன் இரண்டு மணி நேரத்தில் காபுலை கைப்பற்றுவோம் என தலிபான் செய்தி தொடர்பாளர் ஒருவர் சூளுரைத்திருக்கிறார்.

Also Read:  ஹேப்பி பர்த்டே வைகை எக்ஸ்பிரஸ் – ஒரு குட்டி பிளாஷ்பேக்!

உஸ்பெஸ்கிஸ்தானில் 84 ஆப்கன் அரசுப் படை வீரர்கள் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் அவர்களுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படுவதாகவும் அந்நாட்டு செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆப்கனின் 4வது பெரிய நகரான ஜலாலாபாத்தை தலிபான்கள் இன்று சண்டையின்றி கைப்பற்றியிருக்கின்றனர். நகர் முழுவதும் தலிபான்களின் கொடி ஏற்றப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பல நகரங்களில் இருந்து தஞ்சமடைவதற்காக காபுல் வந்தடைந்த மக்கள், தற்போது தலிபான்களின் வருகையை அறிந்து சோகத்திலும் அதிர்ச்சியிலும் மூழ்கியுள்ளனர். காபுல் நகரம் உச்சகட்ட பரபரப்பில் இருந்து வருகிறது.
Published by:Arun
First published: