ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், அங்கு மனித உரிமை மீறல் விவகாரம் தலைதூக்கியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் விதமாக, அமெரிக்க ஊடகவியாளரும், இயக்குனருமான இவோர் ஷெரேர் என்பவரையும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தயாரிப்பாளர் பைசுல்லா பைஸ்பக்ஷ் ஆகியோரை தாலிபான் அரசு கைது செய்து ரகசிய இடத்தில் சிறை வைத்துள்ளது. ஆகஸ்ட் 17ஆம் தேதி, ஷெரேர் மற்றும் பைஸ்பக்ஷ் ஆகியோரை பிடித்து கைது செய்துள்ளதாக சர்வதேச அமைப்புகள் தெரிவிக்கின்றன.
சில வாரங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா தலைவர் ஐமன் அல்-ஜவாஹிரி அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலால் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஆவணப்படம் ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகவியலாளரும் இயக்குனருமான இவோர் ஷெரேர் இரு உள்ளூர் ஊடகவியலாளருடன் இணைந்து ஷூட் செய்துள்ளனர். அப்போது தாலிபான் அரசின் பாதுகாப்பு அலுவலர்கள் 50 பேர் சம்பவயிடத்திற்கு வந்து இருவரையும் கைது செய்துள்ளனர். அத்துடன் இருவரையும் கண்களை கட்டி ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று சிறை வைத்துள்ளனர்.
இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் பரபரப்பை கிளப்பியுள்ளது. சர்வதேச ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைப்பான CPJ இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரியுள்ள அமைப்பு, இதுபோன்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது என வலியுறுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், அமெரிக்காவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு வொர்க் பெர்மிட் அனுமதியுடன் வந்த ஷேரேர், ஆப்கானிஸ்தானின் 40 ஆண்டுகால வரலாற்றை ஆவணப்படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார். இவரின் படைப்புகள் சர்வதேச விழாக்கள், கருத்தரங்குகளில் திரையிடப்படுகிறது.
இதையும் படிங்க: 37,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் தூங்கிய விமானிகள்.. ரன்வே தாண்டி தரையிறங்கியதால் பரபரப்பு!
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க படை ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பியதை அடுத்து, அங்கு தாலிபான் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இதன் பின்னர் பெண்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இந்த பிரச்சனையை தொடர்ந்து தாலிபான் அரசிடம் முன்வைத்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Afghanistan, Taliban