பொது மன்னிப்பு வழங்குகிறோம், பணிக்கு திரும்புங்கள் - அரசு ஊழியர்களுக்கு தாலிபான்கள் உத்தரவு

taliban

தாலிபான்கள் தங்களின் முந்தைய ஆட்சியை போன்றே நாட்டை ஆளத்தொடங்குவார்கள் என அரசு ஊழியர்கள், பெண்கள் பதைபதைப்பில் இருந்து வருகின்றனர்.

  • Share this:
தாலிபான்கள் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதாகவும் விரைவில் பணிக்கு திரும்புமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தாலிபான்கள் கொடுங்கோல் ஆட்சி நடத்தி வந்த நிலையில், 2001ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்த அல் கொய்தா இயக்க தலைவர் ஒசாமா பின் லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக அவரை வேட்டையாட அமெரிக்க தன் படைகளை ஆப்கனுக்கு அனுப்பி வைத்தது. இதன் பின்னர் தாலிபான்களை ஒடுக்கி அவர்களுடன் போரிட்டு ஆப்கானிஸ்தானில் மக்கள் ஆட்சி மலர வழிவகுத்துக் கொடுத்தனர்.

Also Read: மாணவர்களுக்கு ஷாக்: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த அமைச்சர் அப்டேட்!

கடந்த 20 ஆண்டுகாலமாக ஆப்கானிஸ்தான் அரசுப் படைகளுக்கு ஆதரவாக இருந்து வந்த அமெரிக்கா தலைமையிலான படைகள் தாலிபான்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் காரணமாக அங்கிருந்து வெளியேறத் தொடங்கினர். இதையடுத்து ஆப்கன் படைகள் தாலிபான்களுடன் நேரடியாக மோதும் சூழல் ஏற்பட்டது, இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு ஆப்கன் படைகள் செயல்படாமல் மிக விரைவாகவே பின் வாங்கினர், இதனையடுத்து தாலிபான்கள் ஒவ்வொரு நகராக அசுர வேகத்தில் கைப்பற்றி வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியன்று தலைநகர் காபுலை கைப்பற்றி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

taliban


தாலிபான்களுக்கு பயந்து ஆப்கன் அதிபராக இருந்த அஷ்ரப் கனியும் நாட்டை விட்டு தப்பியோடிய நிலையில், காபுலில் இருந்து தப்பித்தால் போதும் என ஆப்கானிஸ்தானியர்கள் அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்று வருகின்றனர். தாலிபான்கள் தங்களின் முந்தைய ஆட்சியை போன்றே நாட்டை ஆளத்தொடங்குவார்கள் என அரசு ஊழியர்கள், பெண்கள் பதைபதைப்பில் இருந்து வருகின்றனர்.

Also Read:  தலிபான்கள் ஆட்சியை பிடித்த நாளில் காபுல் வானில் போராடிய இந்திய விமானம் – திக் திக் நிமிடங்கள்!

இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கிவிட்டதாகவும், எனவே உங்களுடைய வழக்கமான பணியை பயம் இல்லாமல் முழு நம்பிக்கைடன் செய்யத் தொடங்குங்கள் என தாலிபான்கள் அறிவித்துள்ளனர். காபுலில் சில கடைகளும் திறந்திருக்கின்றன. போக்குவரத்து காவலர்கள் தங்களின் பணியை தொடங்கி உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் 1996 முதல் 2001 வரை ஆட்சி செய்த தாலிபான்கள் பெண்களை மிகவும் கட்டுப்படுத்தி வைத்திருந்தனர். கல்லெறிந்து கொல்வது, பெண்களை பள்ளிகள், பணியிடங்களுக்கு செல்ல இயலாத வகையில் வைத்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் தற்போது பெண் செய்தியாளர் ஒருவருடன் ஆப்கான் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் தாலிபான் தலைவர் ஒருவர் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Arun
First published: