ஹோம் /நியூஸ் /உலகம் /

தாலிபான் முக்கிய தலைவரான அகுந்த்சாதா உயிரிழந்ததாக தகவல்

தாலிபான் முக்கிய தலைவரான அகுந்த்சாதா உயிரிழந்ததாக தகவல்

ஹிபத்துல்லா அகுந்த்சதா

ஹிபத்துல்லா அகுந்த்சதா

தாலிபான் அமைப்பின் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சாதா, பாகிஸ்தான் தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தாலிபான்களின் தலைவராக இருந்த முல்லா அக்தார் மன்சூர், அமெரிக்கப் படைகளால் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு, அந்த இயக்கத்தை ஹைபதுல்லா அகுந்த்சாதா வழி நடத்தி வந்தார். தாலிபான்களின் ஷரியா நீதிமன்றத் தலைவரான அகுந்த்சாதா, 1990-ஆம் ஆண்டில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய போது மத விவகாரங்களில் முக்கிய முடிவு எடுத்து வந்தார். குற்றவாளிகளாக கருதப்படுபவர்களை பொது இடத்தில் கொல்வது, பெண்களுக்கு கல்வி கற்க தடை விதித்தது போன்ற மிக கடுமையான சட்டங்களை அமல் படுத்தியவர்.

  ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றிய பின்னர் ஹைபதுல்லா அகுந்த்சாதா உச்சபட்ச தலைவராக இருப்பார் என்றும் அவருக்கு கீழ் அரசு செயல்படும் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால், தாலிபான்கள் வெளியிட்ட அமைச்சரவைப் பட்டியலில் அகுந்த்சாதா பெயர் இடம் பெறவில்லை.

  இந்நிலையில், அகுந்த்சாதா கடந்த ஆண்டு பாகிஸ்தான் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக தற்போது தாலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்தத் தகவலை தாலிபான்களின் மூத்த தலைவர் அமீர் அல் முஃமினின் ஷேக் உறுதிப்படுத்தியுள்ளார். துணை பிரதமராக அறிவிக்கப்பட்ட முல்லா பராடரும் கொல்லப்பட்டுவிட்டதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.

  அதனை மறுத்த தாலிபான்கள், அவரது ஆடியோவை வெளியிட்டனர். ஆப்கானிஸ்தானில் பத்திரிகைகளோ, செய்தி ஊடகங்களோ இல்லாத நிலையில் அங்கு நடைபெறும் நிகழ்வுகள் மர்மமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Taliban