ஆப்கானிஸ்தானின் புதிய அரசு: தாலிபான்கள் இன்று அறிவிப்பு வெளியிட வாய்ப்பு!

கோப்புப் படம்

ஆட்சி அமைப்பதின் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக தாலிபான்கள் கூறியுள்ளனர். இன்றைய தினம் மதிய தொழுகைக்கு பின்னர் புதிய அரசு குறித்த அறிவிப்பை அவர்கள் வெளியிடக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 • Share this:
  ஆப்கானிஸ்தானில் அமையவுள்ள புதிய அரசு தொடர்பான அறிவிப்பை தாலிபான்கள் இன்று வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியுள்ளதை தொடர்ந்து புதிய அரசை அமைக்கும் முயற்சியில் தாலிபான்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தாலிபான் அரசுப் போல் இது இருக்காது என்றும் சில மாற்றங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  ஈரான் மாடலில் தாலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அமையும் என்று கூறப்படுகிறது. அதன்படி, ஆப்கானிஸ்தானில் பிரதமர் மற்றும் அதிபருக்கும் மேலாக சுப்ரீம் லீடர் எனப்படும் உயர் தலைவர் செயல்படுவார். இந்தப் பதவியில் தங்கள் இயக்கத்தின் உச்ச அதிகாரம் பெற்ற  முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாதா-வை நியமிக்க தாலிபான்கள் முடிவுசெய்துள்ளனர்.

  மேலும் படிக்க: பஞ்ஷிர் போராளிகளிடம் செம அடி வாங்கிய தாலிபான்கள்.. நூற்றுக்கணக்கில் பலி என தகவல்!


  அனைவருக்குமான அரசாக புதிய அரசு இருக்கும் என தாலிபான்கள் கூறியிருந்தனர். ஆட்சி அமைப்பதின் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இன்றைய தினம் மதிய தொழுகைக்கு பின்னர் புதிய அரசு குறித்த அறிவிப்பை அவர்கள் வெளியிடக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. போர்கள் காரணமாக வலுவிழந்துள்ள பொருளாதாரத்தை வலுபடுத்தும் விதமாக புதிய அரசு அமையுமா என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  இதையும் படிங்க: யாருக்கு என்ன பதவி- அதிகார சண்டையில் தவிக்கும் தாலிபான்கள்!


  ஆப்கானிஸ்தானில் பெண்கள் வழக்கம்போல் வேலைக்கு செல்லலாம் என்றும் அதேவேளையில், புதிய அரசில் பெண்களுக்கு இடம் இருக்காது என்றும் முக்கிய பதவிகளில் அவர்கள் அமர்த்தப்பட மாட்டார்கள் என்றும்  தாலிபான் மூத்த தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் கூறியிருந்தார்.  இதையடுத்து,  புதிய அரசின் கீழ் பணியாற்ற உரிமை கோரி நேற்றைய தினம் 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஹெராத் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Murugesh M
  First published: