Kandahar | காந்தகார் நகரை கைப்பற்றிய தலிபான்கள்: ஆப்கானிஸ்தானின் 2வது பெரிய நகரும் வீழ்ந்தது!

காந்தகார்

காந்தகாரில் சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. காந்தகார் நகர் தான் தலிபான்களின் பிறப்பிடமாகும். மேலும் முந்தைய காலகட்டத்தில் இந்நகரம் தலிபான்களின் வலுமிக்க பகுதியாக விளங்கியது.

  • Share this:
காபுலுக்கு பிறகு ஆப்கானிஸ்தானின் 2வது பெரிய நகரமாக விளங்கும் காந்தகாரை கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இதன் மூலம் அரசுப் படைகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. காந்தகாரை தாங்கள் முழுமையாக கைப்பற்றிவிட்டதாக தலிபான் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இதனை அரசுத் தரப்பில் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.

அமெரிக்க படைகள் வெளியேற்றத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாகவே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருக்கிறது. ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. பெரும்பாலான நகரங்களை சுற்றி வளைத்து தலிபான்கள் கடுமையாக தாக்குதலில் ஈடுபட்டு வருவது ஆளும் அஷ்ரஃப் கனி தலைமையிலான ஆப்கன் அரசுக்கு பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Taliban | தலிபான் Vs ஆப்கன் அரசுப் படைகள்.. ஒரு ஒப்பீடு

காந்தகார் ஏன் முக்கியம்?

கடந்த சில நாட்களாகவே தலிபான்கள் அசுரத்தனமாக முன்னேறி வருகின்றனர், அதே நேரத்தில் அரசுப் படைகள் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன. சுமார் மூன்றில் ஒரு பகுதி மாகாண தலைநகரங்களை தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். மேலும் ஆப்கனில் இப்போது தலிபான்கள் 65% இடங்களை தங்கள் வசம் கொண்டு வந்து விட்டனர்.

இதுவரை 10 மாகாண தலைநகரங்களை தலிபான்கள் கைப்பற்றியிருக்கின்றனர் என்ற போதிலும் காந்தகாரை அவர்கள் கைப்பற்றியிருப்பது தலிபான்களுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகவே கருதப்படுகிறது. தலிபான்களின் மின்னல் வேக முன்னேற்றத்தை கண்டு அனுபவமிக்க ராணுவ ஆய்வாளர்களே வாயடைத்து போயிருக்கின்றனர். இந்த வேகத்தில் சென்றால் ஆப்கானிஸ்தான் விரைவில் தலிபான்களிடம் வீழ்ந்துவிடுமோ என்ற அச்சமும் கவலையும் ஒட்டு மொத்த உலக நாடுகளிடையே ஏற்பட்டிருக்கிறது.

Also Read:  ஆப்கனில் இந்தியா கட்டிக் கொடுத்த ₹2000 கோடி மதிப்பிலான சல்மா அணை மீது தலிபான்கள் தாக்குதல் முயற்சி

காந்தகார் நகர் தான் தலிபான்களின் பிறப்பிடமாகும். மேலும் முந்தைய காலகட்டத்தில் காந்தகார் தலிபான்களின் வலுமிக்க பகுதியாக விளங்கியது. நகரின் மையப் பகுதியில் தாக்குதல் தொடுக்கும் முன்னர் வாரக்கணக்கில் நகருக்கு வெளியே அவர்கள் படைகளை குவித்து வந்திருக்கின்றனர். கடந்த புதனன்று காந்தகாரின் மைய சிறைச்சாலையை தலிபான்கள் தகர்த்தனர். அங்கிருந்த அரசுப் படைகள் நகரில் இருந்து பின்வாங்கிவிட்டதாகவும் தெரியவந்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காந்தகாரில் சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. விவசாய மற்றும் தொழில்துறையில் வளர்ச்சி பெற்ற பகுதியாகவும் விளங்குகிறது. ஆப்கனின் முக்கிய பொருளாதார மண்டலமாக காந்தகார் விளங்கிவரும் நிலையில் தலிபான்களுக்கு இது முக்கிய வெற்றியாக மாறியிருக்கிறது.
Published by:Arun
First published: