ஹோம் /நியூஸ் /உலகம் /

ஆப்கான் - பாகிஸ்தான் எல்லையில் பறக்கும் தாலீபான் கொடி: முக்கிய பகுதியை கைப்பற்றினர்!

ஆப்கான் - பாகிஸ்தான் எல்லையில் பறக்கும் தாலீபான் கொடி: முக்கிய பகுதியை கைப்பற்றினர்!

தாலீபன்

தாலீபன்

அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால் ஆப்கானிஸ்தானில்  தாலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அந்நாட்டின் முக்கிய நகரங்கள் பலவற்றையும் தாலீபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் முக்கிய பகுதியை கைப்பற்றிய தாலீபான் தீவிரவாதிகள், தங்கள் கொடியை பறக்க விட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில்  தீவிரவாதிகள் மற்றும் அரச படைகளுக்கு இடையே  சுமார் 20 ஆண்டுகளாக   உள் யுத்தம் நடைபெற்று வருகிறது.  அரசு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளும் இந்த உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா விரும்பியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதன் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா- தாலீபான்கள் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி,  செப்டம்பர் 11ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  இதன்படி,  தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பக்ரம் விமான தளத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க படைகள் வெளியேறியது.

இதையும் படிங்க: வெவ்வேறு தடுப்பூசிகளை போடுவது ஆபத்தானது - உலக சுகாதார நிறுவனம்...

அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால் ஆப்கானிஸ்தானில்  தாலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.  ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியில் தஜிகிஸ்தான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள படாக்ஸ்கான் மற்றும் கந்தகார் மாகாணங்களில் உள்ள நகரங்களை தாலீபான்கள் கைப்பற்றினர். இந்நிலையில், பாகிஸ்தானின் சாமன் நகருக்கு எதிரேயுள்ள ஆப்கானிஸ்தானின் வெஷ் நகரில் உள்ள எல்லையை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக தாலீபான் தீவிரவாதிகள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் ஆப்கானிஸ்தான் கொடியை விட உயரத்தில் தாலீபான் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.  அமெரிக்கர்கள் மற்றும் அவர்களின் கைப்பாவைகளின் கொடூரத்தின் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, இந்த வாயில் மற்றும் ஸ்பின் போல்டாக் மாவட்டம் தலிபான்களால் கைப்பற்றப்பட்டன என்று நபர் ஒருவர் கேமரா முன்பு கூறுகிறார்.

மேலும் படிக்க: பூமியை நெருங்கும் ’சூரியப் புயல்’- உலக அளவில் மின்சாரம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு?

தற்போது தாலீபான்கள் கைப்பற்றியதாக கூறப்படும்  பகுதி இருநாட்டுக்கு இடையேயான எல்லை பகுதியாக இருந்து வருகிறது.  இதன் வழியாகதான் முக்கிய போக்குவரத்துகள் நிகழ்கின்றன. நாளோன்றுக்கு சுமார் 900 டிரக்குகள் இந்த பாதையை கடக்கின்றன.

இந்த பகுதி தற்போதும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஆப்கான் அரச படைகள் கூறும் நிலையில், தாலீபான்களின் கையே ஓங்கியுள்ளதாக குடிமக்கள் மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Published by:Murugesh M
First published:

Tags: Afghanistan, Taliban