ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில், அந்நாட்டு சிறையில் உள்ள ஜிஹாத் தீவிரவாதிகளை விடுதலை செய்து வருகிறது. புல்-இ-சர்கி மற்றும் பதம் பாக் ஆகிய இரண்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த அனைத்து கைதிகளையும் தாலிபான் நேற்று விடுதலை செய்துள்ளனர். அதில் கேரளாவைச் சேர்ந்த 8 பெண்கள் உள்ளிட்ட 24 இந்தியர்ககளும் உள்ளனர்.
இந்த எட்டு பெண்களும் கடந்த, 2016 ஆம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர இந்தியாவில் இருந்து பாகிஸ்தானில் உள்ள நங்கர்ஹார் பகுதிக்கு சென்றவர்களின் குடும்பத்தினர். கேரளாவின், மலப்புரம், ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களால் தேர்வு செய்யப்பட்டு, குடும்பத்துடன் பாகிஸ்தான் அழைத்துச் செல்லப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால்,சிரியாவில் நடைபெற்ற சண்டையில் பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவரை இழந்து விதவைகள் ஆனார்கள்.
Also Read: தாலிபான்கள் என்னை கொல்லப்போகிறார்கள்.. காத்திருக்கிறேன் - ஆப்கான் முதல் பெண் மேயர் கண்ணீர்
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் மாற்றப்பட்டு, ஷரியா விதிகளை பின்பற்றும் இவர்களை தாலிபான் விடுவித்துள்ளதால், விதிகளின் படி விதவைகள் மீண்டும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருக்கு திருமணம் செய்து வைக்கப்பட உள்ளனர். அதேபோல், சிறையிலிருந்து வெளியே வந்துள்ள இந்தியர்களில், காபூல் குருத்வாரா தாக்குதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளியான தேடப்பட்டு வந்த தீவிரவாதி அய்ஜாஸ் அஹ்மது அகங்கார் மற்றும் அவனது கூட்டாளிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Also Read: காபூல் வீதிகள் விசித்திரமா இருக்கு.. சீக்கிரம் தாடி வளரனும். மனைவி, மகள்களுக்கு புர்கா தேடுகிறேன் - காபூல்வாசியின் கண்ணீர்
கடந்த ஆண்டு மார்ச் மாதம் காபூலில் உள்ள சீக்கிய குருத்வாராவில் நடைபெற்ற கொடூர தாக்குதலில் 27 சீக்கியர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். அந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அய்ஜாஸ் அகங்கார் ஆப்கான் அதிகாரிகளால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான் ,கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அய்ஜாஸ் அஹ்மது அகங்கார், ஶ்ரீநகரைச் சேர்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து, கைது செய்யப்பட்ட அகங்காரை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பினர் அமைப்பினர் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் செல்லவிருந்தனர். ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விடுவிக்கப்பட தீவிரவாதிகள் மற்ற நாடுகள் வழியே இந்தியாவிற்குள் நுழையலாம் என எதிர்பார்க்கப்படுவதால், கண்காணிப்பை தீவிரப்படுத்த தேசிய புலனாய்வு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இன்டர்போல் உள்ளிட்ட வெளிநாட்டு பாதுகாப்பு அமைப்புகளின் உதவியுடன் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைவதைத் தடுக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
மேலும், இந்தியாவிற்கு எதிரான தாக்குதலுக்கு இவர்களை தாலிபான் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுவதால், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு, உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.