• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • இந்தியாவுடனான ஏற்றுமதி இறக்குமதியை தடை செய்த தாலிபான்கள்

இந்தியாவுடனான ஏற்றுமதி இறக்குமதியை தடை செய்த தாலிபான்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் மேற்கொண்டிருந்த ஏற்றுமதி, இறக்குமதியை தாலிபான்கள் தடை செய்துள்ளது.

  • Share this:
    ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவாக சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கப் படைகள் இருந்தன. சமீபத்தில், அமெரிக்க அரசு, தங்கள் படைகளை பின்வாங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் அரசை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் அதிகாரம் தாலிபான்களின் கட்டுக்குள் சென்றது உலக அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

    இனிமேல் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக தீவிர அடக்குமுறை இருக்கும் என்று உலக நாடுகள் அச்சம் கொள்கின்றனர். அதைக் கடந்து ஆப்கானிஸ்தானில் இருந்த தூதரகங்களை உலக நாடுகள் மூடியுள்ளன. இந்தியாவும், ஆப்கானிஸ்தானிலிருந்த நம்முடைய தூதரகத்தை மூடியுள்ளது. முந்தைய ஆப்கானிஸ்தான் அரசுடன் இந்தியா இருந்த நிலையில் தாலிபான்கள் அந்த இணக்கம் தொடர்வது கேள்விக்குறியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை தாலிபான் தடை செய்துள்ளது.

    இதுதொடர்பாக பேசிய இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் இயக்குநர் அஜய் ‌ஷகாய், ‘இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. அந்த வகையில் சர்க்கரை, தேயிலை, காபி, மசாலா பொருட்கள், துணி வகைகள், தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

    அதே போல ஆப்கானிஸ்தானில் இருந்து பழ வகை உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டது. குறிப்பாக உலர் பழங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்துதான் இந்தியாவுக்கு வந்தன. இப்போது தலிபான்கள் இந்தியாவுக்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு தடை விதித்து இருக்கிறார்கள்.

    ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு சாலை மார்க்கமாக பொருட்கள் வருவது வழக்கம். கண்டெய்னர்களில் இவை அனுப்பப்படும். இந்தியாவுக்கு வரும் இந்த பொருட்களின் வாகனத்தை தாலிபான்கள் தடுத்து விட்டனர்.

    எனவே அங்கிருந்து இனி பொருட்கள் வருவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. மேலும் துபாய் வழியாகவும் இந்தியாவுக்கு பொருட்கள் வந்தன. அதுவும் தடுக்கப்பட்டு உள்ளது.

    ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதே போல ரூ.3,800 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அவை தடைப்பட்டுள்ளது.

    இந்தியாவில் பயன்படுத்தப்படும் உலர் பழங்களில் 80 சதவீதம் ஆப்கானிஸ்தானில் இருந்துதான் வந்தது. தாலிபான்களின் தடையால் இனி அவை அங்கிருந்து வராது. எனவே இவற்றின் விலை மிகவும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுவரை ஆப்கானிஸ்தானுடன் இந்தியா மிகுந்த நட்புணர்வை மேற்கொண்டது. ஆனால் இனி அதற்கான வாய்ப்புகள் குறைந்து இருப்பதால் அந்த நாட்டுடன் உள்ள வர்த்தகங்கள் முடங்கும்’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: