Home /News /international /

ஆப்கானிஸ்தானில் ஊடகத்தில் பணியாற்றிய பெண்களை பணி நீக்கம் செய்த தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் ஊடகத்தில் பணியாற்றிய பெண்களை பணி நீக்கம் செய்த தாலிபான்கள்

ஷாப்னம் தவ்ரன்

ஷாப்னம் தவ்ரன்

ஆப்கானிஸ்தானில் அரசு ஊடகத்தில் வேலை செய்த பெண் ஊழியர்களை தாலிபான்கள் பணி நீக்கம் செய்துள்ளனர்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
  2001- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11- ஆம் தேதி அமெரிக்கா மீது அல்-காய்தா அமைப்பு நடத்திய தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு அல்-காய்தா அமைப்பு இயங்கி வந்ததால், அந்நாட்டை ஆண்டு கொண்டிருந்த தாலிபன்களுக்கு, அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லாடனை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். ஆனால் தாலிபன்களிடமிருந்து எந்த ஒத்துழைப்பும் இல்லலாதால், ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்கும் உத்தரவை செப்டம்பர் 18- ஆம் தேதி பிறப்பித்தார் புஷ்.

  அமெரிக்காவுடன் பிரிட்டன்,கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நேட்டோ படைகளும் இணைந்துக்கொள்ள, அமெரிக்க போர் விமானங்கள் அக்டோபர் 7- ஆம் தேதி ஆப்கானிஸ்தான் மீது முதல் குண்டை வீசின. ஒசாமா பின் லாடனுக்கு அடைக்கலம் கொடுத்த தாலிபன்களையும் அல்-காய்தா பயங்கரவாதிகளையும் ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் நேட்டோ படைகள் ஈடுபட்டன. ஆனால் ஒசாமா பின் லாடன் ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பிவிட, அல்-காய்தா அமைப்பினர் பெருமளவில் கொல்லப்பட்டனர். தாலிபன்கள் மீதும் தாக்குதலை தீவிரப்படுத்திய அமெரிக்கா, காபூலை கைப்பற்றி டிசம்பர் 5- ஆ ம் தேதி ஹமீத் கர்சாய் தலைமையில் இடைக்கால அரசை நிறுவியது.

  ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள சர்வதேச அமைதிப்படை அமைக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் மெல்ல அமைதி திரும்ப, இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் கட்டமைப்பு பணிகளுக்கு உதவ தொடங்கின. எனினும் அமெரிக்க படைகள் படிப்படியதாக விலக்கி கொள்ளப்படும் என அதிபர் ஒபாமா அறிவித்தார். ஒபாமாவிற்கு அடுத்து அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப், ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழலுக்கு ஏற்ப படைகளை வாபஸ் பெறுவது குறித்து முடிவெடுக்கப்படும் என அறிவித்தார்.

  அவருக்கு பின்னால் வந்த பைடன் அமெரிக்க ராணுவத்தை திரும்ப பெறுவதில் தீர்மானமாக இருந்தார். 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு மே மாதம் நேட்டோ படைகளைச் சேர்ந்த 9 ஆயிரத்து 600 வீரர்கள் திரும்ப பெறப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு தாலிபன்கள் தாக்குதலை தொடங்கினர். மே 5 - ஆம் தேதி ல்மாண்ட் உள்ளிட 6 மாகாணங்களில் ஆப்கான் படைகள் மீது தலிபான் தாக்குதலை துவங்கியது.

  தாக்குதலை தொடங்கிய 6 நாட்களுக்குள்ளாகவே காபூலுக்கு மிக அருகில் இருக்கும் நேர்க்ஹ் என்கிற மாவட்டத்தை தாலிபன் படை கைப்பற்றியது. பின்னர் கிராம புறங்கள் குறி வைக்கப்பட்டு, தாக்குதல் நடத்தப்பட்டது. அரசு படையினர் பெருமளவில் கொல்லப்படுவதாக அரசு அறிவித்தது. ஜூன் 7 - ஆம் தேதி மொத்தமுள்ள 34மாகாணங்களில் 26-யை தலிபான் கைப்பற்றியது. தாலிபன்கள் காலூன்ற முடியாது என கருதப்பட்ட மசார்-இ-ஷெரிப்பை ஜூன் 22- ஆம் தேதி தன் வசப்படுத்தியது. நேட்டோ படைகளின் மையமாக விளங்கிய பக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து ஜூலை 2-ஆம் தேதி, அமெரிக்கா படைகள் முற்றிலும் பின்வாங்கின.

  கிராமங்களை விட்டு நகர்புறத்தை நோக்கி நகர்ந்த தாலிபன்கள், ஆகஸ்ட் 6- ஆம் தேதி ஜராஞ்ஜி என்ற மாகாணத்தை முழுமையாக கைப்பற்றி தங்களது கொடியை நாட்டினர். ஹெல்மண்ட், கந்தஹார் உள்ளிட்ட முக்கிய மாகாணங்களின் தலைநகரங்கள் தாலிபன்கள் வசம் செல்ல ஆகஸ்ட் 13-ஆம் தேதி காபூலுக்குள் நுழைந்தது தாலிபன் படை.

  காபூலை முழுமையாக சுற்றிவளைத்த பின்னர், தாலிபான்களுக்கும், அரசு தரப்பிற்கும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தை சுமுகமான முடியாத நிலையில் அதிபர் வெளியேறுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 15- ஆம் தேதி ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியது தலிபான். ஆப்கானிஸ்தானின் ஆட்சி, அதிகாரம் தாலிபான்களின் கைகளுக்குச் சென்றுள்ள நிலையில், அவர்களுடைய ஆட்சியில் பெண்களுக்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் என்ற அச்சம் உலகத்தை கவலைக் கொள்ளச் செய்துள்ளது. ஆப்கானிஸ்தான், பெண்கள் பலரும் தாலிபான்களின் செயல்பாடுகளை நினைத்து அச்சத்தில் உள்ளனர்.

  இருப்பினும், செய்தியாளர்களிடம் பேசிய தாலிபான் அமைப்பு, ‘இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின்படி பெண்களுக்கு முழு உரிமை வழங்கப்படும்’ என்று தெரிவித்தனர். மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் மட்டும் வேலை செய்ய பெண்களுக்கு உரிமை வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் அரசு ஊடகத்தில் பணியாற்றிய பெண் செய்தி வாசிப்பாளர்கள், செய்தியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கு பதிலாக தாலிபான் செய்தியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுகுறித்து தெரிவித்த பாதிக்கப்பட்ட பெண் காடிஜா அமினா, ‘நான் என்ன செய்யப்போகிறேன். அடுத்த தலைமுறைக்கு இங்கு எந்த வேலையும் இல்லை. கடந்த 20 வருடங்களில் என்ன சாதிக்கப்பட்டதோ, அது எல்லாம் போகப்போகிறது. தாலிபான்கள் தாலிபான்கள்தான். அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து தெரிவித்த மற்றொரு செய்தியாளர் ஷாப்னம் தவ்ரான், ‘ஆப்கானிஸ்தான் அரசால் நடத்தப்படும் ஆர்.டி.ஏ பாஷ்டோ செய்தி நிறுவனத்தில் பணியாற்றிவந்தேன். தாலிபான்கள் பொறுப்பேற்ற பிறகு நான் அலுவலகத்துக்கு சென்றபோது, நான் வேலைக்கு வரக்கூடாது என்று சொன்னார்கள். எதற்கு கேள்வி கேட்டபோது, பெண்கள் இனி ஆர்.டி.ஏவில் பணி செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றனர். பெண்கள் படிக்கலாம், வேலைக்கு போகலாம் என்று தாலிபான்கள் சொன்னபோது நான் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், பின்னர் அலுவலகத்துக்குச் சென்றபிறகு நான் நடைமுறையை உணர்ந்தேன். நான், எனது அலுவலக அடையாள அட்டையை காட்டியபிறகும், அவர்கள் என்னை வீட்டுக்குச் செல்லச் சொன்னார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
  Published by:Karthick S
  First published:

  Tags: Afghanistan, Taliban

  அடுத்த செய்தி